அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிறப்பு மருத்துவமனை; அமைச்சர்கள் பேட்டி

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: கோவையில், கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.





latest tamil news


நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா தொற்று நோய்க்கு எதிராக தீவிரமாக செயல்பட்டுவரும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மருத்துவர்கள், சுகாதாரத்துறை, துப்புரவு பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கோவையில் 4 மருத்துவ குழுக்கள் அமைத்து நோய் தொற்று பாதிப்புகளை கண்டறிந்து வருகிறோம். ஐக்கிய அரபு, காம்பியா நாடுகளில் இருந்து வந்தோர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.கோவையில் மட்டும் 1082 பயணிகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 314பேர் தினந்தோறும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கோவை, கருமத்தம்பட்டி சக்தி பொறியியல் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் தற்காலிக கொரோனா சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்படுகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news


அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:"ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் மக்கள் வெளியே வருகின்றனர். இதனால் முதல்வர் கவலை தெரிவித்துள்ளார். அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சுகாதரத்துறை அமைச்சர் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து நிர்வாகங்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கு காமராஜ் - விருதுநகர் ,இந்தியா
25-மார்-202019:18:18 IST Report Abuse
கு காமராஜ் அமைச்சர் அவர்களுக்கு வணக்கம். சிறப்பு மருத்துவமனைகளை புதியதாக அமைப்பதற்கு முன்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளும் முழுவதுமாக கொரோனா சிகிச்சைக்காக தயார்படுத்தலாம். தமிழகத்தில் தலைசிறந்த தனியார் மருத்துவமனைகள் உள்ளது . இதுமாதிரியான இக்கட்டான சூழல்களில் அவர்கள் கண்டிப்பாக இந்த உதவியை செய்தாகவேண்டும் . இந்த கருத்தினை பரிசீலனை செய்து உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி .
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
25-மார்-202018:53:15 IST Report Abuse
siriyaar வெளியில் வருபவருக்கு சூடு வைக்க வேண்டும் அல்லது குண்டுசி கொண்டு குத்த வேண்டும் இன்றும் 30 சதம் நடத்துகின்றனர் விளையாட்டுகள் வழக்கம் போல் நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
25-மார்-202017:28:41 IST Report Abuse
RajanRajan தமிழகத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் அப்பல்லோ சிம்ஸ் KMCH .முதல் காவேரி மருத்துவமனை வரை அத்தனை அரசியல்வாதிகளின் மருத்துவமனைகளிலும் கொரான தாக்குதலுக்கு ஆனவர்களுக்கு தனி பிரிவு துவங்கி சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவு போடுங்க. சிறிய மருத்துவமனைகளை தவிர்த்து மீடியம் ரேஞ்சு மருத்துவமனைகள் வரை குறைந்த பட்ச்சம் 50 நோயாளிகளை பராமரிக்க வேண்டும் என சட்டம் போடுங்க. தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் இந்த சட்டத்தை அமல் படுத்துங்க. இது ஒரு மக்கள் சேவையாக பரிணமிக்கட்டும் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X