பொது செய்தி

தமிழ்நாடு

கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் போலீஸ்காரர்

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
ஊரடங்குஉத்தரவு, போலீஸ், சென்னை, கெஞ்சல், coronovirus, police, chennai,

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி கார் மற்றும் டூவிலரில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ் எஸ்.ஐ., ரஷீத், கையெடுத்து கும்பிட்டு, தயவு செய்து வெளியே வர வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ துவங்கியது. இதனையடுத்து, நேற்று(மார்ச் 24) மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. அத்யாவசிய தேவையின்றி யாரும் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனாலும், இந்த உத்தரவை மதிக்காமல், சிலர் அற்ப காரணங்களை கூறி சாலையில் உலா வருகின்றனர்.


ஊரடங்கு விதிகளை மதிக்காமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை வெளிமாநில போலீஸ் விரட்டி விரட்டி அடிக்கும் காட்சிகளை பார்க்கிறோம். தெலங்கானா சீயெம் சந்திரசேகர் சுட்டுத் தள்ள உத்தரவு போடவா..? என்று கடுப்பாக கேட்கிறார்.

latest tamil news

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து எஸ்.ஐ., ரஷீத் , சாலையில் டூவிலர் மற்றும் கார்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி, ''உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வெளியே யாரும் வராதீர்கள். உங்களை வீட்டில் தான் இருக்க சொல்கிறோம். வேறு எதுவும் உங்களிடம் கேட்கவில்லை. தற்செயலாக தெரியாமல் வந்தால் கூட திரும்பி போய் விடுங்கள்'' என கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Rajendran Thangavel - Dindigul ,இந்தியா
26-மார்-202007:54:41 IST Report Abuse
Dr Rajendran Thangavel Look at the video, he talks with true concern. He is a gem among the violent policemen. His superiors must appreciate him. He is the perfect example of public relations at the cutting-edge level.
Rate this:
Cancel
Dr Rajendran Thangavel - Dindigul ,இந்தியா
26-மார்-202007:46:26 IST Report Abuse
Dr Rajendran Thangavel He is a nice gentleman among other policemen who indulge in violence in containing crowd. He has to be appreciated for his kindness, which will be more effective than indiscriminate lathi-charging.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26-மார்-202007:32:13 IST Report Abuse
VENKATASUBRAMANIAN If people are going for essential services, it should not be stopped. And those who are going to purchase essentials also permitted by their identify. But some people roaming especially youngsters below 22 yrs should be warned.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X