கொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement

வாஷிங்டன்: 'கொரோனா எனும் உயிரி ஆயுதத்தை (பயோ வெப்பன்) திட்டமிட்டுப் பரப்பிய சீனா, 20 டிரில்லியன் டாலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும்' எனக் கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.latest tamil newsசீனாவின் வூஹான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. அங்கு, சீனாவின் மிகப் பெரிய 'வைரலாஜி' ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கும் என, உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்தன.


latest tamil newsஇதையடுத்து, 'அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், வூஹானில் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்தனர்' என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் குற்றம்சாட்டினார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனாவை 'சீன வைரைஸ்' எனக் குறிப்பிட்டார்.அதன்பின், இரு நாடுகளும் மாறி மாறி, தங்களது நாட்டில் பணியாற்றும் எதிரி நாட்டின் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றின.


latest tamil news
இந்நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து, சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.


பயோலாஜிக்கல் ஆயுதம்!


வழக்கு மனுவில், ''கொரோனா வைரஸ் ஒரு 'பயோலாஜிக்கல் ஆயுதம்'. ஒரு மனிதரிடத்தில் இருந்து மற்றவருக்கு எளிதாக தொற்றும்படி அதை சீனா வடிவமைத்துள்ளனர். அந்த வைரசால், உலகில் 3,34,000 பேர் தாக்கப்பட்டுள்ளனர்; 17,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மிகுந்த ஆபத்து நிறைந்தது. உலக பொதுச்சட்டத்தை மீறி இந்த வைரசை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு 20 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை, சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்' எனக் கோரியுள்ளனர்.மேலும், 'சீன பிரதமர் உலகின் நண்பர் அல்ல. சீனாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு வெற்றி பெற, உலக நாடுகள் துணை நிற்க வேண்டும்' எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.


latest tamil newsஇதை ஏற்பதாகப் பல்வேறு நாட்டு மக்களும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, 'உலக மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ், சீனா தயாரித்த உயிரி ஆயுதமாகத் தான் இருக்க வேண்டும். இதற்கு சீனா பதிலளித்தாக வேண்டும்' எனக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
28-மார்-202009:13:28 IST Report Abuse
Sundar At the same time case should be filed against America for compensation for the genocide through military actions taken against Vietnam, Afghanistan, Cambodia, Syria, Iraq, Syria Etc., in the past against the mankind.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
31-மார்-202006:31:03 IST Report Abuse
 nicolethomsonஅப்போ செய்யுங்க , எதுக்கு அடுத்தவங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்? ஓஹோ PMP முடிச்சவரா...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
28-மார்-202009:04:15 IST Report Abuse
Rajagopal சில சமயங்களில் புதிய வெடி குண்டு தயாரிக்கும் போது, தவறாக நம் முகத்திலேயே வெடித்து விடும் அபாயம் உண்டு. சீனா நிச்சயமாக புதியதொரு பயோ வெப்பன் கண்டு பிடித்திருக்கிறது. அது பாதிப்பு ஏற்படுத்த இரண்டு மூன்று வாரங்களாகிறது. சீனாவுக்கு வேண்டாத நாடு எது இருந்தாலும், அந்த நாட்டிலிருந்து வந்த ஒருவருக்குத் தெரியாமல் அவர் மீது இந்தக் கிருமிகள் படும் படி வைத்து விட்டால் போதும். அவர் ஊர் திரும்புகையில் பலருக்கு அது தாவி, ஒரு மாதத்திற்குப் பிறகு பெரிய அளவில் வெடிக்கும். அப்போது எங்கேயிருந்து வந்ததென்றுத் தலையும் புரியாமல், காலும் புரியாமல் கஷ்டப் படுவார்கள். மற்ற நாடுகள் கதவை மூடி விடும். பொருளாதாரம் சில மாதங்களில் மூழ்கி விடும். சீனா இதைத்தான் செய்து வந்திருக்கிறது. ஆனால் தெரியாமல் அவர்கள் முகத்திலேயே விழுந்து விட்டது. அதை அவர்கள் சமாளித்துக் கொண்டு, அதே நேரம் உலகமெல்லாம் எப்படி இதன் தாக்கம் இருக்கிறது என்பதை அளந்து கொண்டு விட்டார்கள். இப்போது நடந்திருப்பது ஒரு சிறு பரிசோதனைதான். இதிலிருந்து இன்னும் நவீனமான, அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பயோ வெப்பன் தயாராகி விடும். அப்போது அதை சீனாவிலிருந்து ஏவி விட வேண்டியிருக்காது. இன்னொரு நாட்டிலிருந்து அதைக் கிளப்பி விட முடியும். எங்கிருந்து வந்ததென்பதே தெரியாது. அவர்கள் பாம்பையும், குரங்கையும், வொவால்களையும் பல நூற்றாண்டுகளாக உண்டு வந்திருக்கிறார்கள். திடீரென்று அங்கிருந்து கிளம்பியதால். பிறகு அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்களாம். மருந்து ஒன்றும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. அப்படியென்றால் எப்படி எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது? அமெரிக்கா திணறுகிறது. உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் மறைக்கப் பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் உலகம் சீனாவைக் கண்டு பயந்து வாழ வேண்டியிருக்கும்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
27-மார்-202018:12:52 IST Report Abuse
THINAKAREN KARAMANI உலக நாடுகளால் தொடரப்படும் இந்த வழக்கு மூலம், உலக பொதுச்சட்டத்தை மீறி செயல்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் உண்மை தோற்றத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X