அரசியல் செய்தி

தமிழ்நாடு

விழித்திரு விலகி இரு வீட்டில் இரு : முதல்வர் வேண்டுகோள்

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

சென்னை: மத்திய அரசின் உத்தரவு படி 21 நாள் ஊரடங்கை நாம் அனைவரும் கடைபிடிப்போம் என தமிழக முதல்வர் இ.பி.எஸ்., உரையாற்றினார்.latest tamil news


கொரோனா குறித்து முதல்வர் இ.பி.எஸ்., தமிழக மக்களிடையே பேசியதாவது: கொரோனாவை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொறுப்பான குடிமகனாக இருந்து நம்மையும் சமூகத்தையும் பாதுகாப்போம். முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றால் சமூக விலக்கலை கடைபிடிக்க வேண்டும். ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து கொரோனாவை ஒழிக்க போராடுவோம்.


latest tamil news
21 நாட்கள் என்பது விடுமுறை அல்ல குடும்பத்தை காக்க அரசு விடுத்திருக்கும் உத்தரவு. கொரோனாவை விரட்டட உறுதிஏற்போம்.கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையாக மருத்துவமனைகளில் 10 ஆயிரத்திற்கும், மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். நடைபாதை வியாபாரிகளின் நலன்காக்க அரசுஅறிவித்துள்ள ரூ. 1000 த்துடன் மேலும் கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவ உதவி தேவை எனில் 104 எண் அல்லது 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் கூறினார்.


பிரதமருக்கு கடிதம்முன்னதாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ரூ.500 கோடியாக உயர்த்த வேண்டும். சிறுகுறு நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டியை இரண்டு காலாண்டு தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.


நாளை ஆலோசனைகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., நாளை(மார்ச் 26) வீடியோ கான்பரன்சிங் முறையில் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
26-மார்-202003:58:47 IST Report Abuse
s t rajan சிறந்த முறையில பணியாற்றும் முதல்வருக்கும் அரசுக்கும் பாராட்டுகள். மருத்துவர்கள், செவலியர்கள் துப்புரவாளர்கள் ரேஷன் வழங்குவோர் மட்டுமின்றி தந்நலம் கருதாது பணியாற்றும் வங்கி ஊழியர்களுக்கும் நம் நன்றி கலந்த பாராட்டுகள். இவர்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ ப்ரார்த்திப்போம்
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
26-மார்-202002:15:36 IST Report Abuse
Raj Implement CAA and NPR to save Indians. Stop sponsoring to pilgrims. Don't be nice for vote politics.
Rate this:
Cancel
palaniamma - Chennai,இந்தியா
26-மார்-202001:38:38 IST Report Abuse
palaniamma ஏதோ ட்விட்டருல போட்டமா, நெட் payment தந்தோமான்னு இல்லாம இன்னும் என்ன கடுதாசி அப்பு அப்புறம் அவுக தந்தி மணி ஆர்டர் அனுப்புவாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X