அத்தியாவசிய பொருட்களுக்கு தடை கூடாது : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Updated : மார் 27, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள, 21 நாள் ஊரடங்கு உத்தரவு காலத்தில், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்தை உறுதி செய்யும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.,க்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவாமல்
 அத்தியாவசிய,பொருட்களுக்கு ,தடை கூடாது, மாநில, அரசுகளுக்கு மத்திய அரசு ,உத்தரவு

புதுடில்லி : கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள, 21 நாள் ஊரடங்கு உத்தரவு காலத்தில், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்தை உறுதி செய்யும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.,க்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், பால், காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என்ற பயம், பொதுமக்களிடையே எழுந்துள்ளது.


நடவடிக்கைஇந்த பயத்தை போக்கும் விதமாக, அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அத்தியவாசிய பொருட்கள் போக்குவரத்துக்கும், விநியோகத்துக்கும் எந்த தடையும் இல்லை. எனவே, காய்கறி, பால், மருந்து போன்றவற்றை போதிய அளவில் இருப்பு வைத்து, அவை, மக்களுக்கு தேவையான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து, விநியோகத்தை கண்காணிக்க வேண்டும். இதற்காக, ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, அவர், இந்த பணிகளை கண்காணிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவோருக்கு வசதியாக, அவர்கள் தொடர்பு கொள்வதற்காக உதவி எண் அறிவிக்கப்பட வேண்டும்.

உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது


.பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பாதுகாப்பு ஏஜென்சிக்கள், ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், சம்பளத்தை குறைத்துள்ளதாகவும் புகார்கள் வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை, தனியார் பாதுகாப்பு ஏஜென்சிக்கள் கைவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


கையிருப்பு அவசியம்!

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை போதிய அளவில் கையிருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தைகளில், அத்தியவாசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்யும் வகையில், கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில், வர்த்தர்கள், வியாபாரிகள், லாப நோக்குடன் செயல்படக் கூடாது. ராம்விலாஸ் பஸ்வான்மத்திய உணவுத் துறை அமைச்சர், லோக் ஜனசக்தி


அதிகாரிகளுக்கு உத்தரவு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை, அவர்களது வீட்டு உரிமையாளர்கள் மிரட்டுவதாகவும், வீட்டை காலி செய்யும்படி நெருக்கடி தருவதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து, இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள, மண்டல இணை ஆணையர்களுக்கு அதிகாரம் அளித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
27-மார்-202016:05:38 IST Report Abuse
Varatharaajan Rangaswamy ஒடடன்சத்திரம் சந்தை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. என்னைப் போன்ற விவசாயிகள் ஏராளமானோர் மிகவும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனது தோட்டத்தில் உள்ள சுமார் 2500 கிலோ பறிப்பதற்கு வழியும் இல்லை. நேற்று முதல் வெள்ளரிக்காய்களை எங்களால் முடிந்தவரை பறித்து மாடுகளுக்கு கொடுத்து வருகிறோம். விவசாய விளை பொருட்களை எங்கும் எடுத்துச் செல்ல முடியாத வகையில் போலீசாரின் கெடுபிடியும் இருப்பது நிலைமையை மோசமாக ஆக்குகிறது. நகரத்தில் வசிக்கும் நாங்கள் கிலோ எண்பது ரூபாய் கொடுத்து காய் வாங்குகிறோம். ஆனால் எனது தோட்டத்தில் இருக்கும் காயை எடுக்கவும் முடியாமல் கெடுபிடி சந்தையில் விற்றாலும் ஒரு கிலோவுக்கு எட்டு ரூபாய் கிடைக்கிறது என்ன செய்வது? இன்னும் இரண்டு வாரங்களுக்கு கண் முன்னே எங்கள் உழைப்பு வீணாவதை பார்த்து விதியை நொந்துகொண்டு இருக்க வேண்டியதுதான்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-மார்-202018:55:10 IST Report Abuse
அசோக்ராஜ் அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து & விநியோகத்தில் தடை இருக்காதாம். ஆனால் பொருள் வாங்குவதற்கு முழு தடை. வெளியே கால் வச்சா அடிப்போம். அடிபடாம கடைக்கு போய் பொருள் வாங்கி உயிரோடு வீடு திரும்ப உத்தரவாதம் இல்லை. நாம ஒளிஞ்சு ஒளிச்சு திருடப் போறவன் மாதிரி பணம் கொடுத்து பொருள் வாங்கி உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு திரும்பணும். ஆனா கொரோனா பாதிப்புக்கு நம்மளையே கட்டம் கட்டுவானுங்க. இன்னும் எத்தனை நாள் இப்படி ஓடும்? பார்ப்போம்.
Rate this:
Cancel
Tamilan - kailasa,இந்தியா
26-மார்-202012:19:29 IST Report Abuse
Tamilan பிள்ளையை கிள்ளி விட்டு விட்டு தொட்டிலையும் ஆட்டுவோம் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X