விலகியிருத்தல் சிறந்தது!

Added : மார் 25, 2020
Share
Advertisement
 விலகியிருத்தல் சிறந்தது!

விலகியிருத்தல் சிறந்தது!

விலகியிருப்பது மட்டுமே, கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த வழி என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே, பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகளை துண்டித்து, விலகிஇருக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மோகன் பாகவத்தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,


பீதி வேண்டாம்!



டில்லி மக்கள், வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. எனவே, பயம், பீதி அடைய வேண்டாம். அரவிந்த் கெஜ்ரிவால்டில்லி முதல்வர், ஆம் ஆத்மி


ரொம்ப கொடுமை!



கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற நெருக்கடியான நேரத்திலாவது, காஷ்மீரில், தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு மேலும், அவர்களை காவலில் வைத்திருப்பது, மிகவும் கொடுமையான விஷயம். ஒமர் அப்துல்லாதலைவர், தேசிய மாநாட்டு கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X