பதப்படுத்தும் துறைக்கு தடையில்லை

Added : மார் 25, 2020
Share
Advertisement

புதுடில்லி:கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


உறுதி


இது குறித்து, மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை செயலர், குருபிரசாத் மொகாபத்ரா பிறப்பித்துஉள்ள உத்தரவின் விபரம்:நாட்டு மக்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும். அதனால், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை மூடுமாறு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு அதிகாரிகள் உத்தரவிடக் கூடாது.அதேசமயம், அந்நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்பில், பாதுகாப்பு மற்றும் துாய்மை தொடர்பான விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையே, உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, மின்னணு வர்த்தக சேவை, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் வாகன போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


அனுமதி



ஊரடங்கு உத்தரவு காரணமாக, மக்கள் பீதியடைந்து, உணவுப் பொருட்களை வாங்க அலைமோதுவதை தடுக்க, சில்லரை விற்பனைக் கடைகள், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றை திறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X