பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு உத்தரவால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

புதுடில்லி :கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, மத்திய அரசு அமல்படுத்தியுள்ள, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால், '9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என பிரிட்டனைச் சேர்ந்த, 'பார்க்லேஸ்' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை:மத்திய அரசின், 21 நாள் ஊரடங்கு நடவடிக்கையால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 சதவீதம் அல்லது 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

வரும் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.2 சதவீதத்தில் இருந்து, 1.7 சதவீதம் குறைந்து, 3.5 சதவீதமாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறையும், இலக்கை தாண்டி உயரும்.ரிசர்வ் வங்கி, ஏப்., 3ல் வெளியிட உள்ள நிதிக் கொள்கையில், 'ரெப்போ' வட்டி, 0.65 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படும் என, தெரிகிறது. இத்துடன், இந்தாண்டுக்குள், மேலும், 0.35 சதவீத வட்டி குறைக்கப்படலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த, எம்.கே., நிறுவனம், 'கொரோனா தடுப்பு நடவடிக்கையில், இந்தியா, இதர நாடுகளை விட விரைவாக செயல்பட்ட போதிலும், பொருளாதார பாதிப்பிற்கான தீர்வுகளை வெளியிடாமல் மவுனம் சாதிக்கிறது' என, தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால், அமைப்பு சாராத துறையினர் பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால், சிறு வியாபாரிகளுக்கு கடன், கடன் மறுசீரமைப்பு, ரொக்கம் போன்ற நிதியுதவிகளை வழங்க வேண்டும் எனவும், எம்.கே., நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X