சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

வறுமையை போக்க கவர்ச்சியாக ஆடினேன்!

Added : மார் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வறுமையை போக்க கவர்ச்சியாக ஆடினேன்!

பல மொழிகளில், 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள, கவர்ச்சி நடனத்திற்கு பெயர் பெற்ற, 'டிஸ்கோ' சாந்தி: அப்பா ஆனந்தன், பழம்பெரும் சினிமா நடிகர்; படிப்பறிவு இல்லாததால், சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். கடைசியில், ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட, கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது.
தனியார் பள்ளிக்கு, 'பிளைமவுத்' காரில் சென்று வந்த நான், வறுமையின் பிடியில் சிக்கி, ஒரு வேளை கஞ்சி கூட கிடைக்காத நிலையில், நீண்ட துாரம் நடந்து சென்று, பள்ளியில் படித்தேன்.குடும்பத்தின் வறுமையை போக்க, அப்பா தான், என்னை நடிக்க அனுப்பினார். பத்தாவது படிக்கும் போதே, நடிகர் மோகன் லாலுடன், மலையாள படத்தில் நடித்தேன்.கதாநாயகி என கூறி, ஒப்பந்தம் செய்து, கவர்ச்சி நடனம் ஆட வைத்த தயாரிப்பாளர்கள் ஏராளம். குடும்ப வறுமையை போக்க, அதற்கு ஒப்புக் கொள்வேன். பல மொழிகளில், முன்னணிநடிகர்களுடன் நடித்து, கோடி கோடியாக குவித்தேன்.எல்லா படங்களிலும் கவர்ச்சி வேடமே தந்ததால், குடும்பத்தினரை, என் படங்களை பார்க்க விட மாட்டேன்.
உடன் பிறந்தவர்களை, நல்ல நிலைமைக்கு உயர்த்த வேண்டும் என்பதற்காக, கிடைத்த வேடங்களில் எல்லாம் நடித்தேன்.எனினும், தவறான எண்ணத்தில் என்னை அணுகியவர்களை, கடுமையாக தாக்கி, பல சர்ச்சைகளில் அப்போது சிக்கியுள்ளேன்.சென்னை, வளசரவாக்கத்தில், 3 கிரவுண்டில், அம்மா எங்களுக்கு வீடு கட்டி இருந்தார். அதற்குப் பிறகு தான், எனக்கு எவ்வளவு வருமானம் என்பது தெரிந்தது.ஆனால், அம்மாவுக்கு படிப்பறிவு இல்லாததால், அந்த வீட்டை, பக்கத்தில் இருந்த ஒருவர் நிலத்தில் கட்டி விட்டார்.

நிலத்தின் உரிமையாளருக்கே, அந்த வீட்டை கொடுத்து விட்டோம்.தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்த ஸ்ரீஹரி, என்னை காதலித்தார். 1992ல், கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென கழுத்தில் தாலி கட்டி விட்டார்; தாலியை கழற்றி, கோவில் உண்டியலில் போட்டு விட்டேன்.அதன் பின், 1996ல் தான், முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். 2013ல் அவர், திடீரென இறந்து விட்டார்; அந்த துக்கத்தி லிருந்து இன்னும் மீளவில்லை. அவர் நடத்திய தொண்டு நிறுவனத்தை, ஐதராபாதில் நடத்தி வருகிறேன். எங்களிடம் உதவி பெற்ற பலர், டாக்டர்கள், இன்ஜினியர்கள் ஆக உள்ளனர். அது தான் எனக்கு பெருமையாக உள்ளது. என் உடன் பிறந்தவர்களுக்கு, என் மீது கொள்ளை பிரியம்; எனக்கு ஒன்று என்றால், தாங்கிக் கொள்ள மாட்டார்கள். என் மகன்கள் இருவர், நடிகர்களாக தயாராகி வருகின்றனர். எனக்கும் நடிக்க, இப்போதும் ஆசை தான்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajanradhakrishnan - Sugarland,யூ.எஸ்.ஏ
26-மார்-202007:21:04 IST Report Abuse
rajanradhakrishnan பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அவருடன் சில படங்களில் நடித்திருக்கிறேன். அவருக்கு அனைத்து சக்திகளையும் அருள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ராஜ் திலக்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X