சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்; செயல்பட வேண்டும். ஆனால், தமிழக அரசின் செயல்பாடுகள், அவ்வாறு அமையவில்லை; கொரோனா தடுப்பு நடவடிக்கை மனநிறைவாக இல்லை.

'டவுட்' தனபாலு: தமிழக அரசு எவ்வளவோ அறிவிப்புகளை வெளியிட்டாலும், அதை பின்பற்ற வேண்டியது மக்கள் தானே... 'தனித்திருங்கள்' என அரசு அன்பாக சொல்லியதை, நம் மக்கள் பின்பற்றுகின்றனரா... கொரோனா விவகாரத்தில் மக்களுக்குத் தான், அரசியல் தலைவர்கள் நிரம்ப அறிவுறுத்த வேண்டும் என்பது, இதன் மூலம், 'டவுட்' இல்லாமல் தெரிகிறது; செய்வீர்களா?


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, சமையலில் ஈடுபடும் பெண்கள், நோய் தடுப்புக்காக, 'சானிடைசர்' திரவத்தை கைகளில் தடவி, உடனே சமையலுக்கு சென்றால், தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அந்த திரவம் காய்ந்த பின், சமையல் வேலைகளில் பெண்கள் ஈடுபட வேண்டும்.

'டவுட்' தனபாலு: அனைவரும், சானிடைசர் பயன்படுத்தும் நிலையில், உங்களின் அறிவுரை, பலருக்கும் உபயோகமானது தான். எனினும், சமூக நீதி காக்கும் தலைவரான நீங்கள், 'சமையலறைக்கு செல்லும் பெண்கள்' என குறிப்பிடுவது தான், சற்று நெருடலாக உள்ளது. இதன் மூலம், பெண்கள் சமையல் செய்யத் தான் என்ற எண்ணம் இன்னும் மறையவில்லையோ என்ற, 'டவுட்' எழுகிறது.



துணை முதல்வர், பன்னீர் செல்வம்: அரைக்க, அரைக்க சந்தனம் மணப்பது போல, எதிரிகள் எதிர்க்க, எதிர்க்க எங்கள் அரசிற்கு ஏறுமுகமாக உள்ளது. இலங்கை தமிழர் நலனில் ஜெயலலிதா மிகுந்த அக்கறை செலுத்தினார்; அதை எங்கள் அரசு பின்பற்றி வருகிறது.

'டவுட்' தனபாலு: குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்ட அரசியல், கொரோனா வைரஸ் தாக்கத்தால் காணாமல் போயுள்ளது. அதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. அது, உங்கள் பேச்சில், 'டவுட்' இல்லாமல் தென்படுகிறதே!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
26-மார்-202017:32:12 IST Report Abuse
Suppan ஐயா வீரமணி வீட்டிலிருக்கும் பொழுது சோப்பினால் கை கழுவினால் போதும். வெளியிலிருக்கும் பொழுது கை கழுவ இடமும் தண்ணீரும் கிடைப்பது கஷ்டம். ஆகவே வேறு வழியில்லாமல் ஆல்கஹால் உள்ள sanitizer உபயோகப் படுத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X