சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மார் 25, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'எந்த விவகாரத்திலும், குஜராத்தை மட்டும் நீங்கள் விடவே மாட்டீர்கள் போலும்...' என, செல்லமாக சொல்லும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: நோய் தொற்றை கண்டறிவதற்கான கருவியின் தரத்தை நிர்ணயிக்க, குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு தான், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிற நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விதிமுறை, வாபஸ் பெறப்பட வேண்டும்.


'ராஜ்யசபா எம்.பி., ஆன மகிழ்ச்சியில், பா.ஜ., - எம்.பி., போலவே பேசத் துவங்கி விட்டீர்கள்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: மத ரீதியிலான போராட்டங்களை, எதிர்க்கட்சிகள் தான் துாண்டி விடுகின்றன. மதச்சார்பின்மை என்ற பெயரில், மக்களை ஏமாற்றாதீர்கள் என, அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம்.


'நீங்கள் சொல்வது சரி தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேட்டி: மறைந்த, திரைப்பட இயக்குனர் விசு, குறைந்த பட்ஜெட் படங்கள் எடுப்பதில் வல்லவர். தயாரிப்பாளர்களுக்கு அது தான் பிடிக்கும். அந்த வகையில், அவர் தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர், நடிகர், வசனகர்த்தா.



'நீங்கள் நினைத்தால், இப்போதைய அரசியலில், தமிழகத்திலும் முயற்சிக்கலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு: கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் இடையே இருந்த நட்பு, கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்; அரசியல் மேதைகள் மார்க்ஸ் - ஏஞ்சல்ஸ் இடையே இருந்தது போன்றது. அரசியலில் இத்தகைய நட்பை காண்பது அரிது.


'அது தான், ரேஷனில் அரிசி வாங்குவோருக்கு, தமிழக அரசு, 1,000 ரூபாய் கொடுக்கப் போகிறதே...' என, நினைவூட்டும் வகையில், சி.ஐ.டி.யு., பொதுச் செயலர் சுகுமாறன் அறிக்கை: கட்டுமானம், வீட்டு வேலை, தையல், ஆட்டோ, கால் டாக்சி போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள், இப்போது கடும் பாதிப்பை அடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணத்தை, மாநில அரசு வழங்க வேண்டும்.



'டி.எம்.சவுந்தரராஜன் எந்த ஜாதியை சேர்ந்தவர் என யோசிக்காமல் இருந்தவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து விட்டீர்களே கவிஞரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், கவிஞர் வைரமுத்து அறிக்கை: குஜராத்திலிருந்து சவுராஷ்டிரா மக்களை, தனக்கு பட்டாடை நெய்ய, இங்கே அழைத்து வந்தான் மன்னன் திருமலை. அந்த ஆடைகள், குறிப்பிட்ட காலத்திற்கு பின் நைந்து விடும். அதே சமுதாயத்தை சேர்ந்த, டி.எம்.சவுந்தரராஜனின் பாட்டாடைகள், எந்த காலத்திலும் நையாதது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X