சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஸ்டாலின் மாறி வருகிறார்!

Added : மார் 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

ஸ்டாலின் மாறி வருகிறார்!

க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: இப்பகுதியில், சென்னை வாசகர் ஒருவர், 'இரட்டை வேடம் வேண்டாமே' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலினைப் பற்றி, சமீபத்தில், கடிதம் எழுதியிருந்தார்.எந்த அரசியல்வாதியும், ஒரே கொள்கையோடு இருப்பதில்லை. ஈ.வெ.ரா.,வின், கடவுள் மறுப்பு இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த, அண்ணாதுரை, 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்றார்.'அண்ணாதுரை வழியில், நான் ஹிந்துகளுக்கு எதிரி அல்ல' என, பலமுறை ஸ்டாலின் சொல்லி விட்டார். இருந்தும், அவரை வம்புக்கு இழுப்பது ஏன்?ஸ்டாலின் மனைவி துர்கா, கோவில் கோவிலாக சென்று, பூஜை செய்கிறார். வீட்டிலே, தனியாக பூஜை அறையும் உள்ளது. இதற்கு ஆட்சேபனையோ, மறுப்போ, ஸ்டாலின் தெரிவிக்கவில்லை.கடவுள் மறுப்பு கொள்கையில், ஸ்டாலின் விடுபட்டு வருகிறார். இந்த முன்னேற்றத்தை, அவரது கட்சி தொண்டர்களே பாராட்டுகின்றனர்.சில மாதங்களுக்கு முன், திருச்சியில், குத்து விளக்கேற்றி, மேள தாள முழக்கத்துடன், தி.மு.க., சார்பில், மாநாடு துவக்கப்பட்டது. 'ஊரோடு ஒத்து வாழ்' என, ஸ்டாலின் மாறி வருவதை, 'இரட்டை வேடம்' என்பது, ஏற்கத்தக்கதல்ல.ஜம்மு - காஷ்மீர் பிரச்னை, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, அவர் அதிகம் பேசுவதில்லை. அச்சட்டத்தின் நோக்கங்களை, அவர் புரிந்துள்ளார்.அரசியல்வாதிகள் அனைவருமே, பல வேடங்கள் போடுவோர் தான். இதில், அவர் மட்டும் விதிவிலக்கல்ல. காலத்திற்கேற்றாற் போல் மாற்றிக் கொள்வது தான், அரசியல்.


நாத்திகருக்கு நல்லதல்ல!சூ.கிருஷ்ணன், சின்ன வேடப்பட்டி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தி.க.,வினர் உட்பட, சிலர் அரசியல் ஆதாயத்திற்காகவும், சுயநலத்திற்காகவும், ஹிந்து கோட்பாடுகளை, தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர்.நம் பண்பாடு, கலாசாரம் அனைத்துமே, ஹிந்து தத்துவங்களையும், கோட்பாடுகளையும் அடிப்படையாகவே கொண்டுள்ளவை.ஹிந்து மதத்தில் மட்டும் தான், 4,000 ஆண்டுகளுக்கு முன்பே, பக்தி அறநெறிகளை நிலைநாட்ட, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் யோகிகளும், ஞானிகளும் அவதரித்தனர். ஹிந்து, புத்தம், சீக்கியம், சமணம், ஜெயின் போன்ற அனைத்து மதங்களும், சங்கமிக்கும் பூமி, இந்தியா.பெண்களை, அன்னையாகவும், சக்தியாகவும் கருதி, அனைத்து புனித நதிகளுக்கும், பெண்ணின் பெயரை சூட்டினர்.ஹிந்து மதத்தில் மட்டும் தான், நாத்திகர்களை காண முடியும். ஏனெனில், அதில் மட்டும் தான் சகோதரத்துவம், பரந்த மனப்பான்மை, சகிப்புத்தன்மைகளை காண முடியும்.நாத்திகர்களே... கருணாநிதி, ஈ.வெ.ரா., ஆகியோர் நினைவு நாளன்று, அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து, இரு கரம் கூப்பி வணங்குகிறீர்களே, ஏன்?அதை, நாங்கள் செய்தால், காட்டுமிராண்டித்தனமா?ஹிந்துக்களிடம், தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களை காயப்படுத்துவது, நல்லதல்ல!

l


பாராட்டிவரவேற்போம்!என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், தற்போது, ராஜ்யசபா, எம்.பி.,யாக பதவி ஏற்று இருக்கிறார்அவர் பதவி ஏற்ற போது, 'வெட்கம்... வேதனை' என, கண்டனக் குரல் எழுப்பி, காங்கிரஸ் உட்பட, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமளி செய்தனர்.'ரபேல்' விமான வழக்கிலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வழக்கிலும், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாக, அவர் தீர்ப்பு அளித்து விட்டாராம்... அதற்குக் கிடைத்த பரிசு தான், எம்.பி., பதவி என்கின்றனர், எதிர்க்கட்சியினர்.ஏதோ, இவர் மட்டும் தான், எம்.பி., பதவிக்கு ஆசைப்பட்டவர் போலவும், இதற்கு முன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்கள் யாரும், எம்.பி.,யாகவில்லை என்பது போலவும், நம் காதுகளில் பூச்சூட நினைக்கின்றனர்.இவருக்கு முன், யாரெல்லாம், என்னென்ன பதவிகள் வகித்தனர் என, ஒரு பெரிய பட்டியலையே, நம் நாளிதழில் வெளியானது. அதை, மறுக்க முடியுமா?இதயதுல்லா, சதாசிவம், மார்க்கண்டேய கட்ஜு போன்றோர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்து, ஓய்வு பெற்ற பின், அரசு பதவியில் அமர்த்தப்பட்டனரே... அதை, மக்கள் மறந்து விட்டனர் என, எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனரா?எத்தனையோ, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஓய்வு பெற்ற பின், அரசியலில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகளை வகித்துள்ளனர்.காங்., ஆட்சியில், நீதிபதியாக இருந்தவர்களுக்கு, ஓய்வுக்கு பின், எம்.பி., பதவி கொடுத்ததே இல்லை என்பது போல, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கக் கூடாது. இது, எல்லா ஆட்சியிலும் நடப்பது தான்!'இன்று, என்னை எதிர்த்து, கோஷம் போடுபவர்கள், நாளை, என்னை பாராட்டும்படி நடந்து காட்டுவேன்' என, ரஞ்சன் கோகோய் சபதம் செய்திருக்கிறார்; அதற்காக, அவரை பாராட்டி, வரவேற்கலாம்.


சும்மா ஒண்ணும் கொடுக்கலை!வி.ஹரி, திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: ராஜ்யசபாவிற்கு, தமிழகத்தில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், மூவர் போட்டியிட்டனர். அவர்கள், ஜெயித்து விட்டனர்.'தர்மயுத்தம்' நடந்த போது, பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக நின்ற, கே.பி.முனுசாமி, முன்னாள் லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, த.மா.கா., தலைவர், ஜி.கே.வாசன் ஆகியோர், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், தன் மைத்துனர் சுதீஷுக்கு, 'சீட்' கேட்டு போராடினார். ஆனால், பலன் கிடைக்கவில்லை. ஜி.கே.வாச னுக்கு எப்படி சீட் கிடைத்தது என்பது தான், கூட்டணி கட்சி தலைவர்களிடையே, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க.,வுக்காக, டில்லியில், 'லாபி' செய்ய, ஜி.கே.வாசன் ஏற்ற நபர். 'சட்டசபை தேர்தல் நேரத்தில், டெல்டா மாவட்டத்தில், வாக்காளர்களை சந்திக்க, அப்பழுக்கற்ற பண்ணையார் வாசன் தான் சரியான ஆள்' என, முதல்வர், இ.பி.எஸ்., முடிவு எடுத்து விட்டார்.உடல் நலமில்லாத விஜயகாந்த், ஓடியாடி அலைந்து, பிரசாரம் செய்ய முடியாது. அதேநேரம், வாசனை இழுக்க, பா.ஜ., முயற்சித்தது.அனைத்து விஷயங்களையும் யோசித்து தான், தே.மு.தி.க.,விற்கு, 'சீட்' கொடுக்காமல், வாசனுக்கு கொடுத்தது, அ.தி.மு.க., தலைமை.சும்மா ஒண்ணும் கொடுக்கலைங்க!

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-மார்-202021:13:29 IST Report Abuse
Kalyanaraman வாசன் தனிப்பட்ட முறையில் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை செய்து கிழித்தார். அவருக்கெல்லாம் பதவி என்பது வீடு கார் போல அந்தஸ்தை காட்டும் ஒரு பொருள், அவ்வளவுதான். ஒரு எம்பி பதவி வேஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
26-மார்-202019:22:08 IST Report Abuse
Yes your honor ஸ்டாலின் மாறிவருகிறாரா..? சான்சே கிடையாது... அவரின் அணுகுமுறைகளே முரட்டுத் தனமாகத் தானே இருக்கிறது. ஏதாவது ஒன்றில் குறைகண்டால் அக்குறையைப் போக்க உபாயம் ஏதும் கூறாமல் வெறுமனே தூற்றிப் பேசி ஓர் எதிர்மறை அரசியல் தானே புரியத் தெரிகிறது இவருக்கு. இவரால் எப்படி நல்லவிதமாக சிந்தித்து மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது ஸ்டாலினின் மனோபாவத்திற்கு நேர்மறை எண்ணங்களெல்லாம் வரவே வராது. ' நான் ஹிந்துகளுக்கு எதிரி அல்ல' என்று இவர் எப்பொழுது கூறுகிறார்..? தேர்தல் நேரத்தில் மட்டும் கூறுகிறார்.. அதுவும் 'கம்யூனிஸ்ட்டும், திமுகவும் உள்ளே வரவேண்டாம்' என பகிரங்கமாக கதவுகளில் ஒட்டிய பிறகு அய்யோ அம்மா என்று அலரியடித்துக்கொண்டு 'நான் நல்லவன்.... நான் நல்லவன்' என்று அறிக்கை விடுகிறார்... இதன் பெயர் சந்தர்ப்பவாதம் இல்லாமல் வேறு என்ன பக்கவாதமா?... மேலும் தேர்தல் நேரத்தில் மட்டும் இவருக்கு இந்துக்களும் பிராமணர்களும் வேண்டும், மற்ற நேரங்களில் ஒரு தீபாவளி வாழ்த்து கூட சொல்ல மாட்டார். கேட்டால் கடவுள் மறுப்பு கத்தரிக்காயென்று புருடா ரீல் கணக்கில் விடுவார்... பொங்கல் பண்டிகையைத் தமிழர் திருனாள் என்று கூட கூறாமல், புத்தாண்டு, புடலங்காய் என்று வாழ்த்துக் கூறுவார்... இவையெல்லாம் தான் இரட்டை வேடம் என்பது... அதிலும் ஸ்டாலின் போடுவது இரட்டையல்ல, தசாவதாரம். 'ஜம்மு - காஷ்மீர் பிரச்னை, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, அவர் அதிகம் பேசுவதில்லை. அச்சட்டத்தின் நோக்கங்களை, அவர் புரிந்துள்ளார்.' முதலில் எதற்க்கு தையா தக்கா என்று குதிக்க வேண்டும், பிறகு பம்ப வேண்டும். இவரின் இந்த அடிக்கடி கொள்கையை மாற்றும் கொள்கை இவர் ஒரு ஸ்திர புத்தி இல்லாத, மனக்குழப்பவாதியோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது... திரு. அர்சுனன், செங்கல்பட்டு என்பது கூட பிரசாந்த் கிசோரின் டீமாகக் கூட இருக்கலாம். இப்படியெல்லாம் பொதுஊடகங்களில், அதிலும் தினமலர் போன்ற பலகோடி வாசகர்களைக் கொண்டுள்ள ஒரு மிகப் பெரும் ஊடகத்தில் எழுதுவதன் மூலம் மெதுமெதுவாக நல்லபிள்ளை வேஷம் போட முனைவது எனக்குத் தெளிவாகப் புரிகிறது. சந்தனம் சந்தனமே, மற்றொன்று மற்றொன்றே, தன் பிறவிக் குணத்தால் மாறாது...
Rate this:
Share this comment
Cancel
26-மார்-202016:13:14 IST Report Abuse
மோகன் சுடலை, கிஷோர் சொல்லி கொடுத்ததை கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X