பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : மார் 25, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

மார்ச், 26, 2013 சுகுமாரி:

நாகர்கோவிலில், 1940 அக்., 6ம் தேதி, மாதவன் - சத்தியபாமா தம்பதிக்கு மகளாக பிறந்தவர், சுகுமாரி. சென்னையில் வசித்த, தன் அத்தையும், நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதியிடம் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே, சினிமா துறையில் நுழைந்தார். தன், 11-வது வயதில், ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமாகி, சிறிய வேடங்களில் நடித்து வந்தார். 19-வது வயதில், பிரபலத் தமிழ் இயக்குனர், பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார்.கணவரின் அனுமதியோடு, சினிமாவில் தொ டர்ந்து நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என, பல மொழிகளில், 2,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிகப் படங்களில் நடித்ததற்காக, 'கின்னஸ்' புத்தகத்திலும் இடம் பெற்றார். கடந்த, 2003ல், 'பத்மஸ்ரீ' விருது பெற்றார். 2010ல், நம்ம கிராமம் படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகைக்கான, தேசிய விருதும் பெற்றார். தீக்காயமடைந்தவர், சிகிச்சை பலனின்றி, 2013 மார்ச், 26ம் தேதி காலமானார்.'மலையாள மனோரமா' சுகுமாரி இறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X