பொது செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய பணிகளுக்காக தமிழகம் முழுதும், 500 பஸ்கள்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 அத்தியாவசிய பணிகளுக்காக தமிழகம் முழுதும், 500 பஸ்கள்

சென்னை,: மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும், அரசு பணியாளர்களுக்காக, சென்னையில், 200 பஸ்கள் உட்பட, தமிழகம் முழுதும், 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு உத்தரவுகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடுமுழுதும், ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.எனினும், அவசர மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்காக, சென்னையில், 200 பஸ்களை, மாநகர போக்குவரத்து கழகம் இயக்குகிறது.

இந்த பஸ்களில், தலைமை செயலக ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அழைத்து வரப்படுகின்றனர். இந்த பஸ்கள், மாநகர பகுதிகளுக்குள் மட்டு மின்றி, புறநகர் பகுதிகளான, தாம்பரம், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், ஆவடி, அம்பத்துார், மணலி, எண்ணுார், நெற்குன்றம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று, அரசு ஊழியர்களை அழைத்து வருகின்றன.இதேபோல், அரசு போக்குவரத்து கழகம், நேற்று முதல், ஒவ்வொரு மாவட்டத்திலும், தேவைக்கேற்ப, 10 முதல், 50 பஸ்களைஇயக்குகிறது.சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், நேற்று மட்டும், 300 பஸ்கள் இயக்கப்பட்டன. பொது சுகாதாரம்இந்த பஸ்களில், பொது சுகாதாரம், மின்சாரம், பால் உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு, பின், அவர்களின் இருப்பிடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.இந்த பஸ்கள் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் பயன்பாட்டுக்கு தானே தவிர, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அல்ல என, அரசு போக்குவரத்து கழகம் தெளிவுபடுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X