அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிராமிய கலைஞர்களுக்கு அரசு பஸ்களில் சலுகை

Added : மார் 25, 2020
Share
Advertisement

சென்னை ''கிராமிய, நாடக கலைஞர்கள், வாத்திய கருவிகளை, பஸ்களில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும். ''சென்னை மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், தானியங்கி புகைப்பட கருவிகள், 167.76 கோடி ரூபாயில் பொருத்தப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று முன்தினம், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* மேலுார், பட்டுக்கோட்டை, மண்மங்கலம், அரவக்குறிச்சியில் உள்ள, மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகங்களுக்கு, 11.57 கோடி ரூபாய் செலவில், ஓட்டுனர் தேர்வு தளத்துடன் கூடிய, சொந்த கட்டடம் கட்டப்படும்
* நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, சொந்த கட்டடம் கட்டுதல், குமாரபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தை, வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடமாக விரிவாக்கும் பணிகள், 6.97 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்* கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், உடுமலைப்பேட்டை, குமாரபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகங்கள், 3.41 கோடி ரூபாயில், வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்படும்
* தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், கிழக்கு, மேற்கு என, இரண்டு அலுவலகங்களாக பிரிக்கப்படும் கோவை மாவட்டம், அமராவதி நகர்; வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதிகளில், புதிதாக சோதனை சாவடிகள் அமைக்கப்படும்
* சென்னை மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், தானியங்கி புகைப்படக் கருவிகள், 167.76 கோடி ரூபாயில், படிப்படியாக பொருத்தப்படும்
* கோத்தகிரியில் பணிமனை, கன்னியாகுமரியில் பஸ் நிலையம், தலா, 2.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலகங்களில், 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு அறிமுகம் செய்யப்படும்* அனைத்து அரசு பஸ்களிலும், அடுத்து வரும் பஸ் நிறுத்தத்தின் பெயர்களை, பயணியர் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், நவீன தானியங்கி ஒலி அறிவிப்பு முறை அறிமுகம் செய்யப்படும்
* சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், அவர்களின் வாரிசுதாரர்கள், அரசு பஸ்களில், இலவசமாக பயணம் செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக, அவர்களில், 60 வயதிற்கு மேற்பட்டோருடன் செல்லும் உதவியாளர் ஒருவருக்கும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்
* நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்கள், தங்கள் வாத்திய கருவிகளை, அரசு பஸ்களில், இலவசமாக எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X