அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஊரடங்கை கடைப்பிடிப்போம்!' ஓ.பன்னீர்செல்வம்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 'ஊரடங்கை கடைப்பிடிப்போம்!' ஓ.பன்னீர்செல்வம்

சென்னை :-'பிரதமரின் அறிவுரைகளை கடைப்பிடிப்போம்; ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்போம்' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:உலகையே அச்சுறுத்தி வரும், கொரோனாவின் தாக்கம், இந்தியாவிலும் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

அதனால், ஏற்படும் விளைவுகளை தடுக்க, பிரதமர் மோடி, சமூக விலகலை அறிவுறுத்தி உள்ளார். மேலும், 21 நாட்கள், நாடு முழுவதும், ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசும் தகுந்த முன்னெச்சரிக்கை, நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாம் ஒரு தமிழனாக, தமிழ் மண்ணை காக்க வேண்டும்; ஒரு இந்தியனாக, தேசத்தை காக்க வேண்டும்.

இதற்கு முதலில், நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும். தனிமை, அதுவே நம் எதிர்காலத்தின் இனிமை என்பதை உணர்வோம். பிரதமரின் அறிவுரைகளை கடைபிடிப்போம்; ஜெ., அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்போம்.இவ்வாறு, பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X