பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நாசினி, முக கவசம் வாங்க வங்கி ஊழியர்களுக்கு ரூ.1,000

Added : மார் 25, 2020
Share
Advertisement

சென்னை :வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள், முக கவசம், கிருமி நாசினி, கையுறை போன்ற வற்றை, வீட்டில் வாங்கி பயன்படுத்த, ஊதியத்துடன் கூடுதலாக, 1,000 ரூபாயை, பாரத ஸ்டேட் வங்கியான, எஸ்.பி.ஐ., வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, நாடு முழுதும், 21 நாட்களுக்கு ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.கூடுதல் தொகைஇது தவிர, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், காஸ் நிரப்பும் நிலையம்உட்பட, பல்வேறு சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும், அரசுஅறவித்துள்ளது. இந்நிலையில், வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள், முக கவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவற்றை பயன்படுத்தி, பாதுகாப்புடன் பணியாற்ற, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.வீட்டிலும் பாதுகாப்புடன் இருக்க, ஊழியர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க, கூடுதலாக தொகைவழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், உரிய பாதுகாப்புடன் செயல்பட, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.வங்கிக்குள் நுழையும் போது, கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள, கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், பணம் செலுத்தும் போது, 'கவுன்டர்' அருகே, கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளது. கையை சுத்தப்படுத்திய பின், படிவம் மற்றும் பணம் பெற அனுமதிக்கப்படுகிறது.அறிவுறுத்தல்சில வங்கிகளில், அவர்களது மண்டல அலுவலகங்களில் இருந்து, முக கவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவைவழங்கப்படுகின்றன. சில வங்கிகள், தினசரி செலவு களில் வாங்கிக் கொள்கின்றன. வாடிக்கையாளருடன் நேரடி தொடர்பில் உள்ள, காசாளர் மற்றும் உதவி மேலாளர்கள், கையுறை, முக கவசம் போன்றவற்றை பயன்படுத்தி, பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இருந்தாலும், அவசர தேவை இல்லாமல், வங்கிக்கு வர வேண்டாம் என, வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.எஸ்.பி.ஐ., வங்கி, தன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளிலும் கிருமி நாசினி, முக கவசம் போன்றவற்றை பயன்படுத்த, கூடுதலாக, 1,000 ரூபாயை, மாத ஊதியத்துடன் வழங்கி உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X