அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மக்கள் வெளியே வராதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'

Added : மார் 25, 2020
Share
Advertisement
 'மக்கள் வெளியே வராதிருக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்'

சென்னை, 'வீடுகளை விட்டு, பொதுமக்கள் வெளியில் வராமல் இருக்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான். கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை, வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும், இல்லத்தரசிகளுக்கு உண்டு.
அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி, வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும்.குடும்ப தலைவரும், குழந்தைகளும், வீட்டு வாசலை விட்டு, வெளியே கால்களை எடுத்து வைக்க, குடும்ப தலைவியர் அனுமதிக்க கூடாது.
வெளியில் சென்றால், 'கொரோனா நோயை கொள்முதல் செய்யப் போகிறீர்களா...' என, எச்சரித்து, தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான்.பொதுவெளியில், ஊரடங்கு உத்தரவை வெற்றிகரமாக செயல்படுத்துவது, போலீஸ் துறையினரால் மட்டுமே சாத்தியம்.அவர்களின் பணி மிகவும் சிறப்பானது. வீடுகளை விட்டு எவரும், வெளியில் வராமலிருப்பதை உறுதி செய்யும் வகையில், கடும் நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும்; மக்களை காக்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X