பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் துப்புரவு பணிகள்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 ஊராட்சிகளில் துப்புரவு பணிகள்

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள், துப்புரவு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழகத்தின், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதனால், இந்த மாவட்டங்களில், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் இணைந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.அதேநேரத்தில், துாய்மை பணியாளர்களை அழைத்து சென்று, ஊராட்சி தலைவர்களும், வார்டு உறுப்பினர்களும் தெருத் தெருவாக, துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், பல ஊராட்சிகளில் கொசு தொல்லை குறைந்துள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளின் நடவடிக்கை, கொரோனா அச்சத்தில் உள்ள பொதுமக்கள் மத்தியில், ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காத மாவட்டங்களில், அதிகாரிகள் தலைமையில், இப்பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X