அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு என்ற கசப்பு மருந்தை கடைப்பிடிப்போம்: அன்புமணி

Added : மார் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 ஊரடங்கு என்ற கசப்பு மருந்தை கடைப்பிடிப்போம்: அன்புமணி

சென்னை, 'கொரோனாவை விரட்ட, கசப்பு மருந்து தான் ஊரடங்கு; அனைவரும் கடைப்பிடிப்போம்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி கூறியுள்ளார். அவரது அறிக்கை: நாட்டில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில், 21 நாட்களுக்கு, ஊரடங்கு உத்தரவை, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது, மிகச் சிறந்த நடவடிக்கை.தமிழகத்தில், முதன் முதலில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர், இம்மாதம், 7ம் தேதி அடையாளம் காணப்பட்டார். அவர், 17ம் தேதி முழுமையாக குணமடையும் வரை, அதாவது, 11 நாட்களுக்கு வேறு எவருக்கும் நோய்தொற்று ஏற்படவில்லை.இரண்டாவது நோயாளி, 18ம் தேதி அடையாளம் காணப்பட்டார். ஆனால், அடுத்த ஆறு நாட்களில், கூடுதலாக, 16 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் பார்த்தால், பாதிப்பு, 100 ஐ தொட, 45 நாட்கள் ஆன நிலையில், 10 நாட்களில், 450 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் வேகம் இந்த அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை உணர்ந்து, மக்கள் தங்களையும், மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.
ரூ.3 கோடி நிதியுதவிஅன்புமணியின் மற்றொரு அறிக்கையில், 'தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், மருத்துவ கருவிகள் வாங்குவதற்காக, ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, முதற்கட்டமாக, மூன்று கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன்.'தேவையை பொறுத்து, அடுத்தடுத்த கட்டங்களில், கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
26-மார்-202011:50:06 IST Report Abuse
M.P.Madasamy கொரோனாவால் வேலை இழந்தோரின் கணக்கையும் எடுத்து அவர்களை பட்டினிசாவிலிருந்து மீட்க தேவையான நிதியையும் ஒதுக்குங்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-மார்-202004:14:51 IST Report Abuse
J.V. Iyer வேலைக்கு போகமுடியாமல் இருக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்களும் வீட்டில் இருப்பார்கள். கரோனாவையும் கட்டுப்படுத்தலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X