அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின்

Added : மார் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 குடும்பத்திற்கு ரூ.5,000  தர வேண்டும்: ஸ்டாலின்

சென்னை 'தனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 5,000 ரூபாய் நிதியுதவியை அரசு வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்க, மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு, கலெக்டர்களுடன், தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசித்து, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.

வங்கிகளில் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணை தொகை வசூலை, வங்கிகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். தனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.

டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு சிறப்பு ஊதியமாக, 5,000 ரூபாய் வழங்க, முதல்வர், இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Gunasekaran. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-மார்-202009:16:49 IST Report Abuse
M.Gunasekaran. எப்போதும் எதிர்க்கட்சி என்றால் ஆளும்கட்சியை குறைசொல்வது மட்டுமே என்ற போக்கை மாற்றி நல்ல விஷயங்களில் இணைந்து செயல்படுவதோடு தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
26-மார்-202008:24:33 IST Report Abuse
ocean kadappa india தன்னை தவிர ஆள்பவர் எவராயினும் அவர்களது மக்கள் நோக்கிய செயல்பாடுகளில் குற்றம் காண்பதும் குத்தி விடுவதும் நல்லதா.
Rate this:
Share this comment
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
26-மார்-202008:21:41 IST Report Abuse
ocean kadappa india ஆயிரம் கொடுத்தால் ஐயாயிரம் கொடுக்க வேண்டுமென்று சொல்வது. ஐய்யாயிரம் கொடுத்தால் அது போதாது அதை பத்தாயிரமாக கொடுக்க வேண்டுமென்பது. என்ன இதெல்லாம் மக்களை உசுப்பி விடும் வேலையா.ஒன்றும் மக்களுக்கு கொடுக்கவில்லை என்றால் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்வது.இந்த பம்மாத்துகள் காலம் கடந்தவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X