அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பயம் பரோலில் செல்ல, சசிகலா மறுப்பு

Updated : மார் 26, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
'கொரோனா வைரஸ்' பரவல் காரணமாக, பரோலில் செல்ல, சசிகலா மறுத்து விட்டதாக, அ.ம.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும், சிறை கைதிகள், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடமும், 'பரோல்' விடுப்பில் செல்லுமாறு, சிறை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு, 100
Corona, கொரோனா, சசிகலா, சிறை,ஜெயில், மறுப்பு, பரோல்


'கொரோனா வைரஸ்' பரவல் காரணமாக, பரோலில் செல்ல, சசிகலா மறுத்து விட்டதாக, அ.ம.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும், சிறை கைதிகள், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடமும், 'பரோல்' விடுப்பில் செல்லுமாறு, சிறை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு, 100 நாட்கள் வரை, பரோலில் செல்வதற்கு அனுமதி உள்ளது.சசிகலா பரோலில் செல்லலாம் என, சிறை நிர்வாகம் கூறியும், அவர் விரும்பவில்லை. தன் வழக்கறிஞர்களிடம், 'பரோல் கேட்டு, எந்த மனுவும் தாக்கல் செய்ய வேண்டாம்' என, சசிகலா கூறி விட்டார்.இதுகுறித்து, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலா, நேற்று முதல் ஒரு மாத பரோலில் வெளியே வருவதாக இருந்தது.பெங்களூரு, சென்னை, தஞ்சாவூர் நகரங்களில், ஏதாவது ஒன்றில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை, உறவினர்கள் செய்தனர். ஆனால், சசிகலா வெளியே வர விரும்பவில்லை. கொரோனா பயம் காரணமாக, வெளியே தனியாக இருப்பதை விட, சிறையில் தனியாக இருப்பதே நல்லது என, சசிகலா கருதுகிறார்.

மேலும், தன் தம்பி திவாகரின் மகன் திருமணம், சமீபத்தில் நடந்தது. அதற்கும் வர சசிகலா மறுத்து விட்டார். அதனால், இப்போது வருவது சரியாக இருக்காது என, நினைக்கிறார்.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.ஆனால், ஏற்கனவே, ஜெயலலிதாவுடன் சேர்ந்து அனுபவித்த தண்டனை நாட்களையும் கணக்கில் சேர்க்கும் போது, வரும் செப்டம்பரில் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், அபராதம், 10 கோடி ரூபாயை, தன் சொந்த வருமானத்தில் இருந்து, அவர் செலுத்த வேண்டும்.ஆனால், சசிகலாவின் சொத்துக்கள் மற்றும் பினாமி நிறுவனங்களை, வருமான வரித் துறையினர் முடக்கி வைத்த வழக்கு நடந்து வருகிறது; அந்த வழக்குகளின் முடிவுக்காக, அவர் காத்திருக்கிறார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமதுநிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
27-மார்-202007:02:10 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ஜெயலலிதா அம்மையாரின் ஆன்மா இந்த பிறவியை என்றுமே மன்னிக்காது. கர்மவினை சும்மா இராது அதன் வேலையை செய்தே தீரும். அந்த நன்னாளை வரவேற்போம் .
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
27-மார்-202005:50:48 IST Report Abuse
meenakshisundaram கடவுள் எப்படியெல்லாம் எல்லோருக்குமே சலுகைகள் வழங்குகிறார் ,தன்னை வணங்காதவர்களையுமே அவர் அரவணைக்கிறார் என்று சொல்வார்கள் ,இது சரியாகவே படுகிறது சில சமயங்களில் -இல்லேன்னா வீரமணி,சுப ,வீரன்,வைரமுத்து ,வைகோ ,கனி ராசா போன்றோரும் இந்த பூவுலகில் வண்டியோட்ட முடியுமா?
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-மார்-202021:45:56 IST Report Abuse
ஆரூர் ரங் சமூக விலகல் கடைபிடிக்க உதவியாக என் சிறை அறைக்கு இந்தப் பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு அறைகளை காலியாக வைத்திருக்கவும் . ஷாப்பிங்குக்கு உதவியாக இரவில் மட்டும் மால்களைத் திறந்து உதவவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X