அரசியல் செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Added : மார் 25, 2020
Share
Advertisement
 அத்தியாவசிய பொருட்கள் விற்பனை  கடைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னை 'அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படா விட்டால், அந்தக் கடைகளை மூட, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை, எழிலகத்தில் உள்ள, மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், அனைத்து மாவட்டங்களிலும் எடுக்கப்படும், முன்னெச்செரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று காலை நடந்தது. பின், அமைச்சர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மாநிலம் முழுவதும், 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இதற்கு, மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.முதல்வர் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள, 16 ஆயிரத்து, 743 வருவாய் கிராமங்களிலும், வருவாய் துறை ஊழியர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.தமிழக மக்கள், இந்தியாவிற்கு முன்மாதிரியாக, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். 37 மாவட்டங்களிலும், தற்போதைய நிலை குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.மதுரை, மாட்டுத்தாவணி மார்க்கெட்டில், நேற்று காலை, அதிக அளவில் மக்கள் கூடினர்.அதைத் தொடர்ந்து, 400 காய்கறி கடைகள் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.சுய தனிமை, சமூக இடைவெளியை, அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடை உரிமையாளர்களும், பொருட்கள் வாங்கும் மக்களும், கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.தேவையானவர்களுக்கு உணவு வழங்க, சமுதாய சமையல் அறை அமைக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.சுகாதார துறையினர், காவல் துறையினர் நடவடிக்கைகளுக்கு, வருவாய் துறையினர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அரசு அறிவித்துள்ள, நிவாரண உதவிகளை வழங்கவும், வருவாய் துறையினர் உரிய ஒத்துழைப்பு அளிப்பர். அனைத்து நிலைகளிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு, அறிவுரை வழங்கப்படும்; தேவைப்பட்டால், அவை மூடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X