மருத்துவமனையாக வீட்டை மாற்ற தயார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மருத்துவமனையாக வீட்டை மாற்ற தயார்'

Added : மார் 25, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை :'கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், அரசு அனுமதி அளித்தால், தன் வீட்டை, தற்காலிக மருத்துவமனையாக மாற்றி, மக்களுக்கு உதவ தயார்' என, மக்கள் நீதி மைய தலைவர், கமல் கூறியுள்ளார்.இதுகுறித்து, 'டுவிட்டர்' பதிவில், அவர் கூறியிருப்பதாவது: இந்த நெருக்கடி நேரத்தில், மக்கள் நீதி மையத்தில் உள்ள மருத்துவர்கள் வாயிலாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள என் வீட்டை,
 'மருத்துவமனையாக வீட்டை மாற்ற தயார்'

சென்னை :'கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், அரசு அனுமதி அளித்தால், தன் வீட்டை, தற்காலிக மருத்துவமனையாக மாற்றி, மக்களுக்கு உதவ தயார்' என, மக்கள் நீதி மைய தலைவர், கமல் கூறியுள்ளார்.இதுகுறித்து, 'டுவிட்டர்' பதிவில், அவர் கூறியிருப்பதாவது: இந்த நெருக்கடி நேரத்தில், மக்கள் நீதி மையத்தில் உள்ள மருத்துவர்கள் வாயிலாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள என் வீட்டை, தற்காலிக மருத்துவமனையாக மாற்றி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.

அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக இருக்கிறேன்.உயிர் காக்க, 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்கள், எப்படி பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெருமுதலாளிகளுக்கு மட்டும், உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதி நிலையை என்றும் காத்தவன், சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனம் செய்தால் பதவி இழப்பர். இது, சரித்திரம். மத்திய அரசு சிறு தொழில் செய்பவனுக்கும், உரிய உதவிகளை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X