பொது செய்தி

தமிழ்நாடு

தட்டுப்பாடின்றி காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை:

Added : மார் 25, 2020
Share
Advertisement
 தட்டுப்பாடின்றி காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை:

சென்னை : பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி, காய்கறிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை, தோட்டக்கலை துறையினர் மேற்கொண்டுள்ளனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை தடுக்க, எல்லைகள், 'சீல்' வைக்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. அதேநேரத்தில், பல மாவட்டங்களில், வெண்டை, கத்திரி, பச்சை மிளகாய், தக்காளி, அவரை, கொத்தவரை, நுாக்கல், கோஸ், பீன்ஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் தேவையான அளவு உள்ளது. காய்கறிகளை அறுவடை செய்து அனுப்பினால், உரிய விலை கிடைக்குமா என்ற கவலையில், விவசாயிகள் உள்ளனர். இதனால், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையை, பல மடங்கு வியாபாரிகளும், கமிஷன் ஏஜன்டுகளும் உயர்த்தியுள்ளனர். இது, பொது மக்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காய்கறிகள் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண, தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். விவசாயிகளை தொடர்பு கொண்டு, அவர்களிடம் உள்ள காய்கறிகளை, மார்க்கெட்டுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அனைத்து மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை, 21 நாட்களுக்கு முறையாக பின்பற்ற, வேளாண் துறை செயலர், ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத் துறை இயக்குனர், சுப்பையன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். காய்கறிகள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு, உரிய சான்றிதழ் வழங்கவும், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படும் காய்கறிகள் குறித்த அறிக்கையை, மொபைல் போனில் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X