அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்று முதல் 9 வரை, 'ஆல் பாஸ்' : முதல்வர் அறிவிப்பு

Updated : மார் 27, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : 'தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவர்' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் முதல், மாநிலம் முழுவதும், 144 தடையுத்தரவு அமலுக்கு
 கொரோனா, வைரஸ், ஒன்று முதல், 9 வரை, ஆல் பாஸ் , முதல்வர், அறிவிப்பு

சென்னை : 'தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவர்' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் முதல், மாநிலம் முழுவதும், 144 தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது.


உத்தரவு

இதுதொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று சென்னையில், முதல்வர் வீட்டில், அவரது தலைமையில் நடந்தது. தலைமை செயலர், சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், தீரஜ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் வெளியிட்ட அறிக்கை:கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு, இன்று வரை அமலில் உள்ளது. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், இறுதி தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மாணவர்கள் நலன் கருதி, ஒன்று வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.டீக்கடை மூடல்இந்நிலையில், டீ கடைகள் திறக்க, ஏற்கனவே அரசு அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, தமிழகத்தில் பல இடங்களில், டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால், நேற்று முன்தினம், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், டீக்கடைகளையும் மூட, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, அரசு கூறியுள்ளதாவது:அனைத்து டீ கடைகளையும், நேற்று மாலை, 6:00 மணிக்குள் மூட வேண்டும்.

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, ரேஷன் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை, நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கலாம். மேலும், அனைத்து மளிகை, காய்கறி கடைகளில், அரசின் வழிகாட்டுதல்படி, சமுதாய இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். உணவகங்களில் இருந்து, வீட்டிற்கு உணவு வினியோகிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற அரசின் வழிகாட்டுதல்களை, மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அரசு கூறியுள்ளது.


புதுச்சேரியிலும், 'ஆல்பாஸ்'புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ருத்ர கவுடு செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும், ஏப்ரல், 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், பள்ளி ஆண்டு இறுதி தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 1ம் வகுப்பில் இருந்து, 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-மார்-202005:35:49 IST Report Abuse
skv srinivasankrishnaveni NAANELLAM படிக்கும்போது அஞ்சாம் வகுப்புலேந்து 10ம் வகுப்புவரை வாராந்திர தேர்வு மாசம் முடிவிலே தேர்வு தவிர காலாண்டு அரையாண்டு முழுஆண்டு தேர்வுகள் வரும் பிடிச்சதை டெஸ்ட் பண்ணுவாங்க முதல் அஞ்சு ரேங்க் வரை மார்க்கெடுக்க போட்டிபோடுவோம் எங்கள் அரசு பள்ளியில் ஆசிரியர்களெல்லாரும் அவ்ளோ சிரததையுடன் கர்ப்பிப்பாங்க இன்றும் இந்தமுதுமை லேயும் எங்கள் டீச்சர்ஸ் ஐ நியாபகம் வச்சுண்டுருக்கோம் .,அன்றுபோல டீச்சிங் இன்று இருக்கான்னுதெரியலே , படிக்குறப்பசங்க நன்னப்படிக்குறாங்க என்பதும் உண்மை இப்போதுபோல இல்லீங்க அன்று மேக்சிமம் 95 %தான் பார்த்தோம் இன்று 100%அள்ளிபோடுறாங்களே எவ்ளோநிறைய மார்க்ஸ் வாங்கினாலும் GK ரொம்பவேகம்மா எல்லா சப்ஜெக்ட்டுக்கும் டியூஷன் போறாங்க பிள்ளைங்க சில பெரிய பள்ளிகளில் காம்பாள்சரியாவே இருக்கு டியூஷன் மார்க்ஸ் போடுறதுலேயும்பலகோல்மால்கள் இருக்கு இன்று தரம் அந்தரத்துலே தொங்குது ரேங்க் லே பாஸ் பண்ணியும் பல பிள்ளைகள் CA இண்டெர்லே உசிரைக்கொடுத்துபடிச்சாலும் வெற்றிபெறவேமுடியலே பாவம் அப்படி வடிகட்டி நன்னப்படிக்கும்பிள்ளைகளின் தலையே மண்ணைபோடுறாங்க கேவலமான விஷயம்எங்கேயும் எதுலேயும் லஞ்சம் தான் தேவை நாசமாப்போக தகுதிக்கு இல்லே மதிப்பு
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-மார்-202019:10:41 IST Report Abuse
அசோக்ராஜ் சித்தம் போக்கு சிவம் போக்கு. முந்தாநாள் வரை அஞ்சாப்பு, எட்டாப்புக்கு பொதுத் தேர்வுன்னு குரங்குப்பிடி. இன்னைக்கி ஒம்பதாப்பு வரை ஆல் பாஸ்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-மார்-202010:23:17 IST Report Abuse
RajanRajan அப்போ அண்ணனுக்கு என்னிக்கு கொரானாவுலே ஆல் பாஸ் போடுவீங்கப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X