பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட துவங்கியது

Added : மார் 25, 2020
Share
Advertisement

சென்னை,: மதுரை அரசு மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை மையம் செயல்பட துவங்கியுள்ளது. திருச்சி, விழுப்புரம் மருத்துவமனைகளில், பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன. தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த வைரஸ் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய, சென்னை கிங்ஸ் நிறுவனத்தில் ஆய்வக வசதி உள்ளது. இதுதவிர, சென்னை, ராஜிவ்காந்தி, தேனி, திருவாரூர், திருநெல்வேலி, கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளிலும், பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை அப்பல்லோ மற்றும் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனைகள், ராயப்பேட்டையில் உள்ள நியுபெர்க் எர்லிச் ஆய்வகம் போன்றவற்றிலும், கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.இந்நிலையில், மதுரை, திருச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், மதுரை அரசு மருத்துவமனையில், பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு, அது செயல்பட துவங்கியுள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் எட்டு அரசு ஆய்வகங்கள், மூன்று தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், திருச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில், பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா அறிகுறி இருப்பவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். டாக்டர்களின் பரிந்துரைப்படியே, பரிசோதனை செய்யப்படும். பொதுமக்கள் நேரடியாக ஆய்வகத்திற்கு சென்று, பரிசோதனை செய்ய முடியாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X