அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் ரூ.1,000 வழங்க அரசாணை வெளியீடு

Added : மார் 25, 2020
Share
Advertisement

சென்னை : முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தபடி, ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் மற்றும் உணவு பொருட்கள் வழங்க, 2,187.80 கோடி ரூபாய் ஒதுக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து மாவட்டங்களிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நலன் கருதி, அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், 1,000 ரூபாய் ரொக்கம், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்படும் என, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க, 2,014.69 கோடி ரூபாய்; உணவு பொருட்கள் வழங்க, 173.10 கோடி ரூபாய் என, மொத்தம், 2,187.80 கோடி ரூபாய் ஒதுக்க, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை சார்பில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பணம் மற்றும் பொருட்கள் வழங்கும் பணிக்கு, சென்னை தவிர அனைத்து மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் உணவு வழங்கல் துறை கமிஷனரும் பொறுப்பாவர் என்றும், அரசாணையில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X