சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேவைகள் அனைத்தும் ரத்து சென்னை ஏர்போர்ட் மூடல்

Added : மார் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 சேவைகள் அனைத்தும் ரத்து சென்னை ஏர்போர்ட் மூடல்

சென்னை : சேவைகள் முழுதும் ரத்து செய்யப்பட்டு, சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், இம்மாதம், 22ம் தேதி முதல், சர்வதேச விமான போக்குவரத்திற்கு, மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில், சர்வதேச விமானங்களின் வருகை, 57; புறப்பாடு, 57 என, மொத்தம், 114 விமான சேவைகள் ரத்தாகின.அதேபோல, உள்நாட்டு விமான சேவைகளுக்கு, நேற்று அதிகாலையில் இருந்து, தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால், சென்னையில் இருந்து புறப்பாடு, 196; வருகை, 196 என, மொத்தம், 392 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து, தினமும் இயக்கப்பட்ட, 506 பயணியர் விமான சேவைகள், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால், பழைய விமான நிலையத்திலிருந்து, சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு, ஹாங்காங்கில் இருந்து, கேத்தேபசிபிக் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம், சென்னை வந்து, மீண்டும் அதிகாலை, 3:00 மணிக்கு, பெங்களூரு புறப்பட்டு சென்றது. அதேபோல, சிங்கப்பூரில் இருந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம், நேற்று அதிகாலை 5:00 மணி; மஸ்கட்டிலிருந்து, ஓமன் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் காலை, 6:30 மணிக்கும், சென்னை பழைய விமான நிலையத்தை வந்தடைந்தன. மேலும், பல சரக்கு விமானங்களும் வந்து சென்றன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-மார்-202018:03:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni inthakoraanaavaal erpadum manaaluththam evlo theriyumaa sameebaththule irandhuvitta than thanthayaikkotta makal paarkkave varamudiyaamapochche theriyumaa ninrupona thirumanangkal evlo kand kuppaikalai thunnuppottu சப்பைமூக்கன் வியாதியை உண்டாக்கினான் இப்போது அந்த வைரஸ் பேயாய் உலகையே ஆட்டிப்படைக்குதே
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27-மார்-202006:10:07 IST Report Abuse
 Muruga Velஏன் இப்படி டார்ச்சர் பண்ணறீங்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X