பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 2வது நபர்

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: டில்லியில் இருந்து வந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்துள்ளதாகவும், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.



latest tamil news




மேலும் அவர் கூறியதாவது: மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கள் உடல் நலனை காத்துக் கொள்வது தலையாய கடமை. தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் முக கவசங்கள் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் முக கவசம தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.அவை தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அரசு மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட தனியார் மருத்துவமனைகள் உறுதியளித்துள்ளன.இது குறித்து தனியார் மருத்துவமனையுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம் .

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் அனைவரின் உடல் நலம் சீராக உள்ளது. மேலும் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நேயாளிகளை கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.


இரண்டாவது நபரும் நலம்: அமைச்சர் டுவிட்


அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: டில்லியில் இருந்து சென்னை வந்த நபர் கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது பூரண நலமடைந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட இரண்டு கட்ட பரிசோதனையில் கொரோனா நோய் முற்றிலும் குணமடைந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் இரண்டு நாளில் வீடு திரும்புவார் .மேலும் காஞ்சிபுரத்தை சேர்நத நபர் ஒருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்துள்ளார் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
26-மார்-202006:29:31 IST Report Abuse
 Muruga Vel இந்த மந்திரி தான் அந்த நபரோ என்று எண்ணும் வகையில் புகைப்படங்கள் ...
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-202004:53:28 IST Report Abuse
ram முகக்கவசம் தமிழ்நாட்டில் போதுமான அளவு இருக்குன்னு சொல்லுறீங்களே தவிற , எங்கேயுமே வாங்க முடியலேயே ஜீ..
Rate this:
Cancel
rambo - chennai,இந்தியா
26-மார்-202002:21:20 IST Report Abuse
rambo வழக்கம் போல , உண்மையான எண்ணிக்கை மறைக்க படுகிறது ,
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
26-மார்-202011:02:11 IST Report Abuse
Srinivasஅடிமைகள் ஆட்சியில் உண்மை எப்போது வெளியில் வந்தது? வறட்சியில் விவசாயிகள் பல நூறு பேர் தற்கொலை செய்துகொண்டபோது காய்ச்சலில், வேறு பிரச்சினையில் இறந்துவிட்டதாக அறிக்கை விட்டவர்கள். அதுபோல் டெங்குவில் இறந்தபோது சாதாரண காய்ச்சலில் இறந்துவிட்டனர் உண்மையில் டெங்குவின் மூலம் இறந்தவர்கள் ஒரு சிலரே என்று கூசாமல் பொய் சொன்ன மகா பொய்யர்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X