அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு ரூ.7,000 கோடி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Added : மார் 25, 2020
Share
Advertisement
தமிழகத்திற்கு ரூ.7,000 கோடி  பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை :'தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, கூடுதல் நிதியாக, 7,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர், இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இந்தியாவை பாதுகாக்க, தாங்கள் எடுத்து வரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்.
தமிழகத்தில் ஏற்கனவே, 24ம் தேதி மாலை, 6:00 மணியில் இருந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, 15 ஆயிரம் கோடி ரூபாய், நிதி ஒதுக்கியதற்கு நன்றி.தமிழகத்தில், சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 10 ஆயிரம் படுக்கைகளுடன், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், ஏழை மக்களுக்கு வழங்க, 3,280 கோடி ரூபாய்க்கு, நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
தமிழகத்தில், தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு, பணி செய்யாத நாட்களில், 50 சதவீத சம்பளம் வழங்க, சிறப்பு நிதியாக, 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். தமிழகத்தில், 12 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் உட்பட, 15 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பூதியம் வழங்க, 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஏராளமான தொழிற்சாலைகள், குறிப்பாக, சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அந்நிறுவனங்கள், வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த, அவகாசம் அளிக்க வேண்டும். இரண்டு காலாண்டுக்கான வட்டி மற்றும் அபராதத்தை, தள்ளுபடி செய்ய வேண்டும்.அரசின் வருவாய் பாதிக்கப்பட்டு, செலவு அதிகரித்துள்ளதால், ஜி.எஸ்.டி., வரி வருவாயில், மூன்று சதவீதத்தை, நடப்பு நிதியாண்டு மற்றும் வரும் நிதியாண்டிற்கு வழங்க வேண்டும்.
மருத்துவ உட்கட்ட மைப்பை மேம்படுத்த, 3,000 கோடி ரூபாய்; கொரோனா சவால்களை சமாளித்து, ஏழைகளுக்கு உதவ, சிறப்பு உதவியாக, 4,000 கோடி ரூபாயை, உடனே வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X