அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ் எம்.பி.,க்கள் ரூ.8 கோடி நிதியுதவி

Added : மார் 25, 2020
Share
Advertisement

சென்னை :'தமிழக காங்கிரஸ் கட்சியின், எட்டு எம்.பி.,க்கள், தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தலா, 1 கோடி ரூபாய் நிதியை, மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைக்காக, மாவட்ட கலெக்டர்களிடம் வழங்குவர்' என, அக்கட்சி தலைவர், அழகிரி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவ வசதி செய்வதற்காக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, எம்.பி.,க்கள், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தலா, 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது மாவட்ட கலெக்டர் வாயிலாக, உடனே வழங்குவர். அதேபோல, ஏழு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கணிசமான தொகையை வழங்குவர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இதற்கிடையில், திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர், தன் தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், தலா, 10 லட்சம் ரூபாய், தொகுதி நிதியில் இருந்து வழங்கி உள்ளார். கரூர் எம்.பி., ஜோதிமணி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, மணப்பாறையில் உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, தன் தொகுதி நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X