பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 3 பேருக்கு 'கொரோனா' தமிழகத்தில் பாதிப்பு 26 ஆக உயர்வு

Updated : மார் 26, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
தமிழகத்தில், மேலும் ,3 பேருக்கு ,கொரோனா, தொற்று

சென்னை, :தமிழகத்தில், மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து 'கொரோனா வைரஸ்' பாதித்தவர்கள் எண்ணிக்கை, 26 ஆக உயர்ந்துள்ளது; ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, இதுவரை, 2.9 லட்சம் பேர் வந்துள்ளனர். அவர்களில், 15 ஆயிரத்து, 492 பேர், அரசு ஏற்படுத்தியுள்ள கண்காணிப்பு மையம் மற்றும் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


latest tamil news


தமிழகத்தில், கொரோனா வைரசுக்கு நேற்று முன்தினம் வரை, 18 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மதுரை, அரசு மருத்துவமனையில் இருந்த,மதுரையை சேர்ந்த, 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவுஉயிரிழந்தார். இதன் வாயிலாக, முதல் கொரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 23 இருந்த நிலையில், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் புதிதாக மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18 வயது, 63 வயது ,68 வயதுடையவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அவர்கள் சென்னை, வாலாஜா, பெருந்துறை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-மார்-202012:55:59 IST Report Abuse
Bhaskaran உண்மை சமூக தொற்றாக மாறவில்லை வெப்பநிலை மற்றும் நம் உணவுமுறைகள் ஒரு காரணமாக இருக்கலாம்
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
26-மார்-202010:39:24 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பஸ் கிடைக்கலேன்னு ஒரு கும்பலே மைக் புடிச்சு பேசுது சுடலையும் அதே போல அறிக்கை கும்பலா கூடுனா, "கும்பலாவே "அடக்கம் பண்ண வேண்டியிருக்கும்ன்னு புரியாத மக்கள் நாடு எப்படி வெளங்கும்?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
26-மார்-202006:28:23 IST Report Abuse
 Muruga Vel இதை விட குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பவர்கள் அதிகம் …. இந்த மாதிரி விஷயத்தை சென்சேஷனல் செய்தியாக டெலிவிஷன் சேனல்களும் பத்திரிக்கைகளும் மக்கள் மத்தியில் பீதி கிளப்புகிறார்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X