சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலேசியாவிலிருந்து வந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

Added : மார் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மலேசியாவிலிருந்து வந்த 11 பேர்  மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை :கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இளையான்குடி மருத்துவ குழுவினர் இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து வந்த 11 பேரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து, அவர்களை மருத்துவமனை கண்காணிப்பிற்கு அனுப்பிவைக்க சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், இன்ஸ்பெக்டர் பொம்மையாசாமி அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து பிப்ரவரியில் வந்த 11 பேர் இளையான்குடி அருகே புதுக்குளத்தில் உள்ள ஒரு தோப்பில் தங்கியிருப்பதும், அவர்களில் 48 வயது நபருக்கு தீவிர காய்ச்சல், சளி, தொடர் இருமல் இருப்பதும் குழுவினருக்கு தெரியவந்தது.கொரோனா அச்சத்தில் அவரையும், உடனிருந்தவர்களையும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.மருத்துவ குழுவினர் கூறும்போது, முதலில் இவர்கள் திண்டுக்கல் வந்துள்ளனர். அங்கிருந்து தனி வாகனத்தில் இங்கு வந்து தங்கியுள்ளனர், என்றனர்.
'‛கோட்டை' விட்ட உளவுத்துறை
வெளிநாடுகளில் இருந்து மதரீதியாக இந்தியா வந்து தங்குபவர்கள், பிரசாரம் செய்பவர்களை கண்காணிக்க எஸ்.பி., தனிப்பிரிவு, உளவுப்பிரிவு, கியூ பிரிவு, மத ரீதியாக கண்காணிக்கும் உளவு பிரிவு என பிரிவுகள் உள்ளன.கடந்த சில மாதங்களாக இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியாவில் இருந்து அமைப்பு ரீதியாக வந்த 100க்கும் மேற்பட்டோர் சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், திருப்புத்துார் பகுதியில் பண்ணை வீடுகளில் தங்கியுள்ளனர். இவர்கள் எதற்காக வந்தனர். நோக்கம் என்ன என்பதை கண்காணிக்க வேண்டிய போலீஸ் பிரிவினர் 'கோட்டை' விட்டனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மருத்துவர் குழு இவர்களை கண்டறிந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளது. உளவுப்பிரிவின் வேகமின்மை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
26-மார்-202012:37:28 IST Report Abuse
Dr. Suriya அதில் என்ன அமைப்பு ரீதியாக .....மூர்க்கணுவோன்னு சொல்ல வேண்டியது தானே.....
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
26-மார்-202008:00:11 IST Report Abuse
 nicolethomson இவர்களை கொண்டு கொரோனாவை பரப்புகிறார்களா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-மார்-202004:20:44 IST Report Abuse
J.V. Iyer இவர்கள் போதும் கொரோனாவை பரப்ப. இந்த மெத்தனம் பிடித்த அதிகாரிகளையும் சேர்த்துதான் சொல்கிறேன். இவர்களால் மக்கள் எல்லோரும் அவதிப்படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X