பொது செய்தி

தமிழ்நாடு

வனத்தில் உயிர்களை பலி வாங்கும் போதைப்புற்கள் :குரங்கணி கற்று தந்த பாடத்தை மறந்ததால் மீண்டும் விபரீதம்

Added : மார் 25, 2020
Share
Advertisement

தேவாரம், :இரண்டாண்டுகளுக்கு முன் தேனி மாவட்டம் குரங்கணி காட்டு தீ கற்றுத்தந்த பாடத்தை மறந்ததால், ராசிங்காபுரம் வனத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். எனவே மீட்பு நடவடிக்கைக்காக மதுரையை மையப்படுத்தி 'மல்டி பர்ப்பஸ்' ஹெலிகாப்டர் சேவை துவக்கப்படுவது அவசியம்போடி அருகே காட்டு தீயில் சிக்கி 4 பேர் பலியினர். 2018 மார்ச் 11ல் குரங்கணி காட்டு தீயில் 23 பேர் பலியாயினர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால், நேற்று முன்தினம் அந்த கோர சம்பவம் நடந்திருக்காது.
நவீன சாதனங்கள் இல்லைகுரங்கணி தீ விபத்து பற்றி வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு ஆணையர் அதுல்யா மிஸ்ரா விசாரித்தார். அவரது அறிக்கையில், அடுத்து இது போன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைத்தார். விபத்து நடந்து இரண்டாண்டுகளாகியும், தேனி மாவட்டத்திற்கு எவ்வித நவீன பாதுகாப்பு உபகரணங்களும் வாங்கப்படவில்லை.குரங்கணியில் தீக்காயமடைந்தவர்களை பொட்டலமாக 'டோலி' கட்டி துாக்கி வந்ததால், அனைவரும் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டது. ராணுவ ஹெலிகாப்டரில் சம்பவ இடத்திலிருந்து மீட்டிருந்தால் குறைந்தது 7 பேரை காப்பாற்றியிருக்கலாம். மதுரையை மையப்படுத்தி 'மல்டி பர்ப்பஸ்' ஹெலிகாப்டர் சேவை, இது போன்ற பேரிடர்களில் உதவும்.மனித தவறு வனப்பகுதியில் பாதை ஏற்படுத்தவும், தீவன உற்பத்திக்கும் தீ வைக்கப்படுகிறது. வனப்பகுதியில் எரிக்கப்படுவதால் விலங்கினங்கள், மரங்கள் பாதிப்பதை நாம் உணர்வதில்லை. மண்ணை வளமாக்கும் நுண்ணுயிர்கள் மீது தீ வைக்கப்படுவதால் பசுமை சூழல் மாறி, காடுகள் வெறும் பாறைகளாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
போதைப்புற்கள்

குரங்கணியிலும், ராசிங்காபுரத்திலும் உயிர்பலி ஏற்படுத்தியதில் லெமன் கிராஸ்க்கு(போதை புல்) முக்கிய பங்குள்ளது. அதிலுள்ள எண்ணைப்பசையால் தீ பரவும் வேகமும், அதன் வெப்ப தாக்கமும் அதிகம். இதில் சிக்குபவர்கள் உடனடியாக பலியாகி விடுகின்றனர். கோடை காலத்தில் வனப்பாதையை பயன்படுத்துவதை தவிர்ப்பதே, உயிர்பலி ஏற்படாமலிருக்க ஒரே தீர்வு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X