சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலி மதுரையில் கட்டட ஒப்பந்ததாரருக்கு பரப்பியது யார் தனிமைப்படுத்தப்பட்ட 30 குடும்பங்கள்

Added : மார் 25, 2020
Share
Advertisement

மதுரை :தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் முதல் மரணம் மதுரையில் ஏற்பட்டது. இறந்த கட்டட ஒப்பந்ததாரருக்கு பரப்பியது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒப்பந்ததாரர் காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இரு நாட்களுக்கு முன் உறுதியானது. ஏற்கனவே நாள்பட்ட நுரையீரல் நோய், சிறுநீரகம், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். கொரோனாவும் பாதித்ததால் உடல் நிலை மோசமானது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று முன்தினம் பகலில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இரவு 2:00 மணிக்கு அவர் இறந்தார். இதுதான் தமிழகத்தில் கொரோனாவால் நேர்ந்த முதல் மரணம்.பாதிப்புள்ள நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கோ செல்லாத நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியாக உள்ளது. மசூதி ஒன்றின் நிர்வாகியான இவர், தாய்லாந்தில் இருந்து வழிபாடு நடத்த வந்த 8 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களில் ஒருவர் மூலம் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை சுகாதாரத்துறை உறுதி செய்வதற்குள்ளாகவே அவர் பலியாகிவிட்டார்.தனிமையில் 30 குடும்பம் இரவு 3:30 மணிக்கு ஒப்பந்ததாரரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 4:30 மணிக்கு மத வழக்கப்படி இறுதிச் சடக்கு நடந்தது. இறந்தவரின் மனைவி, மகன், உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என 30 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.ஒப்பந்ததாரர் வசித்த பகுதி மக்கள் பீதியில் வீட்டில் முடங்கியுள்ளனர். இப்பகுதியில் மூன்று தெருக்களுக்கு சீல் வைத்த போலீசார், யாரையும் உள்ளே செல்லவோ, வெளியேறவோ அனுமதிக்கவில்லை. தடையை மீறி வந்த வாகன ஓட்டிகளை 'கவனித்தனர்'. இறந்தவராலும், அவருக்கு பரப்பியவராலும் இன்னும் யாருக்கெல்லாம் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சம் மதுரை மக்களிடம் தொற்றியுள்ளது.

தாய்லாந்து நாட்டினர் இருவருக்கு அறிகுறி

இறந்த ஒப்பந்ததாரர் சந்தித்த பலருக்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், அவருக்கு பரப்பிய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் அவர் தொடர்பில் இருந்த தாய்லாந்து நாட்டினர் 8 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு ரத்தம், தொண்டைச்சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவு கிடைத்த பிறகே ஒப்பந்ததாரருக்கு பரப்பியது தாய்லாந்து நாட்டினரா என்பது தெரியும். அவர்களும் பல மசூதிகளுக்கு சென்று நிர்வாகிகள், மக்களை சந்தித்துள்ளனர். ஒருவேளை பாதிப்பு உறுதியானால், அவர்கள் சந்தித்த நபர்களின் கதி... நினைக்கவே பயமாக இருக்கிறது. இதற்கிடையே 8 பேரில் இருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X