'கொரோனா' எண்ணிக்கை 612.. 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி

Updated : மார் 27, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (7+ 19)
Share
Advertisement

புதுடில்லி: நாட்டில், 'கொரோனா' வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை, 612 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், முதல் பலி நேற்று பதிவான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.



latest tamil news




கொரோனா வைரஸ் தொற்றுக்கு, அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில், 109 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 612 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில், 40 பேர் குணமடைந்துவிட்டனர். 562 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் முதல் கொரோனா பலி, மதுரை மாவட்டத்தில், நேற்று பதிவானது. இதையடுத்து, நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.மேலும், மஹா.,வில் பதிவான மூன்றாவது பலியும், டில்லியில் பதிவான இரண்டாவது பலியும், கொரோனா தொற்றால் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.பிரதமர், நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி மக்களுக்காக, நேற்று, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரசுக்கு, ஏழை - பணக்காரன் பேதம் கிடையாது. சமூக விலகலும், வீட்டுக்குள்ளேயே 21 நாட்கள் இருப்பதும் மட்டுமே, கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த ஒரே தீர்வு.மஹாபாரத போரை வெல்ல, 18 நாட்கள் ஆனது. கொரோனாவுக்கு எதிரான போரை, வெல்ல 21 நாட்கள் தேவை.இவ்வாறு அவர் கூறினார்.


மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், மூன்று உணவகங்களை நடத்தி வந்த சமையல் கலை நிபுணர் ப்ளாய்ட் கார்டோஸ், கொரோனா தொற்றுக்கு நேற்று பலியானார். அமெரிக்காவின் நியூயார்க் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ளாய்ட், சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்தார். மத்திய பிரதேசத்தில், ஒரு பெண், கொரோனா தொற்றுக்கு நேற்று பலியானார். இது, அம்மாநிலத்தின் முதல் பலியாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும், 21 நாட்கள் மூடப்பட்டுள்ளதை அடுத்து, ஏழை மக்களும், தினக் கூலிகளும், கடுமையாக பாதிக்கப்படுவர். இவர்களது வங்கி கணக்கில், நேரடியாக உதவி தொகை, 'டிபாசிட்' செய்யப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், நாடு முழுவதும், பெரும் குழப்பங்களும், பாதிப்பும் ஏற்படும். அதே போல, இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு, வரி விலக்குகள் மற்றும் நிதி உதவிகள் அறிவிக்கப்பட வேண்டும்.

ராகுல், லோக்சபா எம்.பி., - காங்.,

Advertisement




வாசகர் கருத்து (7+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மார்-202016:32:38 IST Report Abuse
ஆப்பு இன்னிய ஸ்கோர் 649/20.
Rate this:
Cancel
26-மார்-202011:35:00 IST Report Abuse
ஆப்பு ஆமாம்... இவுரும் இவரோட சகாக்களும் தான் மட்டும் தான் வேலை பாக்கலாம். இவிங்க செய்யறதுதான் வேலை. மக்கள் செய்யறதெல்லாம் வெட்டி வேலை.
Rate this:
Cancel
THAYALAN - CHENNAI,இந்தியா
26-மார்-202008:13:56 IST Report Abuse
THAYALAN இதே கருத்தை அமெரிக்க அதிபர் திரு. டிரம்ப் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரை கிண்டல் செய்யும் பாணியில் "மூன்று வாரங்களில் சரியாகிவிடும் அதிபர் டிரம்ப் அதீத நம்பிக்கை" என்று....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X