பொது செய்தி

தமிழ்நாடு

தடை உத்தரவால் வெறிச்சோடிய மருத்துவமனை

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்புவனம்:திருப்புவனத்தில் 144 தடை உத்தரவு காரணமாக அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை குறைந்திருந்தது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் 144 தடைஉத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார துறை, காவல்துறை, பேரிடர் மீட்பு உள்ளிட்ட அத்யாவசிய துறைகள் தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தட்டான்குளம், மடப்புரம், லாடனேந்தல், அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தினமும் 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். தடை உத்தரவு, கொரோனா பீதி, போக்குவரத்து வசதியின்மை காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.காலை 9:00 மணி வரை 50 பேரும் 12:00 மணி வரை 200 பேர் வரை சிகிச்சை பெற்று சென்றனர்.சுகாதார துறை சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீரழிவு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து, மாத்திரைகளை தேவையான அளவு வாங்கி வைத்து கொள்ளவும், அடிக்கடி மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்க்கவும் என வலியுறுத்தியுள்ளனர். முதியோர்கள் , சிறுவர்கள் உள்ளிட்டோர் காரணமின்றி உடன் அழைத்து வருவதை தவிர்க்க வலியுறுத்தியுள்ளனர். காய்ச்சல், கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவர்களை தனியாக சந்தித்து ஆலோசனை பெறவும் வலியுறுத்தி அறிவிப்பு பலகை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X