இரண்டு வார ஊரடங்கு எதிரொலி : இத்தாலியில் குறையும் 'கொரோனா'

Added : மார் 25, 2020
Share
Advertisement

ரோம், :இத்தாலியில், இரண்டு வார கால ஊரடங்கின் விளைவாக, புதிய நபர்களுக்கு 'கொரோனா' பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில், கொரோனா வைரஸ் பாதிப்பு, மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால், அந்நாட்டில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு, நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை, மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலான நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ளும் என, தெரிகிறது.
இத்தாலியில், ஊரடங்கு அமலான பிறகு, பாதிப்பின் நிலை குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதன்படி,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், ௨௧ம் தேதி, ௭௯௩ பேரும், மறுநாள், ௭௪௩ பேரும் பலியாயினர். ஆனால், ௨௩ம் தேதி, இறந்தவர் எண்ணிக்கை, ௬௦௧ ஆக குறைந்தது.
அதேபோல், ௨௩ம் தேதி வைரஸ் தொற்றால், ௮ சதவீதம் மட்டுமே புதிய நபர்கள் பாதிக்கப்பட்டனர். இத்தாலியில், முதல் நபர் பலியான, பிப்., ௨௧ம் தேதிக்கு பிறகு, புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, ௫௦ சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து, இத்தாலியின் சிவில் பாதுகாப்பு சேவை பிரிவின் தலைவர், ஏஞ்சலோ பொரெல்லி கூறும்போது, '' இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட, நடவடிக்கைளின் விளைவுகளை காண முடிகிறது. பாதிப்பின் விகிதம், ஓரிரு நாட்களில் மேலும் குறையும்,'' என்றார்.
இந்நிலையில், இத்தாலியில், ௬௯ ஆயிரத்து, ௧௭௬ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ௬,௮௨௦ பேர் இறந்த நிலையில், ௩,௩௯௩ பேர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X