பொது செய்தி

இந்தியா

பத்து நாட்களுக்கு முன் தயாரான மத்திய அரசின் மாற்று திட்டம்

Updated : மார் 27, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
பத்து நாட்களுக்கு,முன்,தயாரான,மத்திய அரசின்,மாற்று,திட்டம்

புதுடில்லி:நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவை, மாற்று திட்டத்தின் கீழ், குறைந்த ஊழியர்களுடன், அன்றாட நிர்வாகச் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறியதாவது:மத்திய அரசு, பத்து நாட்களுக்கு முன்பாகவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாகி விட்டது.


இருவகை பணிகள்

சமூகத்தில் தனித்திருப்பது தான், வைரஸ் பரவலை தடுக்கும் என்பதால், கடந்த, 14-15ம் தேதிகளில், மத்திய அரசு, மாற்று செயல் திட்டத்தை உருவாக்கியது.அதன்படி, மத்திய அரசு அலுவலகங்களில், மிக அவசியம், அவசியமற்றது என, இரு வகையாக பணிகள் பிரிக்கப்பட்டன.

இதையடுத்து, மத்திய அரசு பணியாளர் நல அமைச்சகம், 17, 19 மற்றும் 20ம் தேதிகளில் அனைத்து துறைகளுக்கும் அனுப்பிய கடிதங்களில், மாற்று திட்டத்தின் கீழ், தேவைப்படும்
பணிகளுக்கான இடைநிலை ஊழியர்களை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. அதில், முக்கிய முடிவுகளுக்கான தரவுகளை அளிக்கும் ஆலோசகர்களில், 60 வயதுக்கு மேற்பட்டோரை, வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்ட செயலாக்கத்திற்கான உத்தரவு, மத்திய அரசின் கூடுதல் செயலர்,
சுஜாதா சதுர்வேதியின் கையொப்பமுடன், கடந்த, 22ம் தேதி, அனைத்து அமைச்சககங்கள், பிரதமர் அலுவலகம், தேசிய தகவல் மையம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டது.அதில்,
'ஒவ்வொரு துறையும், பணியாற்றுவோரின் விபரங்களை சேகரித்து, அத்தியாவசிய
பணிகளுக்கு தேவைப்படுவோரை மட்டும், 23 முதல், 31ம் தேதி வரை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கோரலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


அறிக்கைஇதைத் தொடர்ந்து, இதே திட்டத்தை செயல்படுத்துமாறு, மாநில அரசுகளின் தலைமை
செயலர்களுக்கும், மத்திய அரசு அறிக்கை அனுப்பியது. இதனால் தான், தமிழகம்,
மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், முன்கூட்டியே, 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிந்தது. இந்த மாற்று திட்டம் தான், தற்போதைய, 21 நாள் ஊரடங்கு அமலாக்க காலத்திலும் நீடிக்கிறது.இதன்படி, மத்திய அரசு அலுவலகங்களில், கூடுதல் செயலர்
அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த
விபரங்கள், தொலைபேசி வாயிலாக, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அறிக்கை
தயாரிக்கப்படுகிறது.


'வீடியோ கான்பரன்ஸ்'

இறுதி வடிவம் பெற்ற அறிக்கைக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் அமைச்சர்கள்,
உயரதிகாரிகள் ஆகியோரிடம் அனுமதி கோரப்படுகிறது. அவர்களின் ஒப்புதல் கிடைத்தவுடன், நகலெடுத்து, கையொப்பத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இவை அனைத்தும், குறைந்த
எண்ணிக்கையிலான நேரடி ஊழியர்களுடனும், வீடுகளில் இருந்தபடி பணியாற்றுவோர்
மூலமாகவும் நடைபெறுவதால், அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தடையின்றி நடைபெற்று

வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
26-மார்-202018:16:51 IST Report Abuse
r.sundaram அந்த நேரத்தில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்க வில்லை என்றால் நம் நாடு இன்று திவாலாகி இருக்கும். பாகிஸ்தானுக்கு நோட்டு அடிக்கும் இயந்திரத்தை விற்றவரின் புண்ணியத்தால், பாகிஸ்தானின் இந்திய ரூபாய்கள் சந்தையில் வந்து ஒரிஜினல் நோட்டுகளை விழுங்கி இருக்கும். சராசரி மனிதனுக்கு இந்த இரு நோட்டுகளுக்கும் வித்தியாசம் தெரியாது. பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கும் இந்தியா. அதை தவிர்த்தவர் மோடி என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
27-மார்-202023:05:09 IST Report Abuse
Nallavan Nallavanதமிழ் என்று தேசவிரோதிகள் பெயர் வைத்துக்கொண்டு கும்மியடிக்கிறார்கள் ............
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
26-மார்-202018:08:14 IST Report Abuse
Ram இந்த மக்களுக்கு எவ்வளவு செஞ்சாலும் திருப்தி இல்லை, எல்லாம் ஓசியில சொகுசு வாழ்கை வாழ்ந்து பழக்கப்பட்டுட்டானுக
Rate this:
Share this comment
Cancel
26-மார்-202014:29:41 IST Report Abuse
ஆப்பு திட்டத்தைப் போட்டுருவாய்ங்க. அதில் வரும் எதிர் விளைவுகளை யோசிக்கவே மாட்டாங்க. தனக்கே எல்லாம் தெரியும்னு நினைப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X