பொது செய்தி

இந்தியா

2 கிலோ கூடுதல் உணவு பொருட்கள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

புதுடில்லி :நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மாதந்தோறும், மானிய விலையில் வழங்கப்படும், ஐந்து கிலோ உணவு பொருட்களை, ஏழு கிலோவாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர், மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது.
கொரோனா வைரஸ் பீதியால், கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி, மத்திய ஒலிபரப்புத்தறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
பொது வினியோக திட்டத்தின் மூலம், மத்திய அரசு, மாதந்தோறும், ஒருவருக்கு, 5 கிலோ கோதுமை, கிலோ, 2 ரூபாய்க்கும்; ஐந்து கிலோ அரிசி, கிலோ, 3 ரூபாய்க்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கால கட்டத்தில், உணவுப் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது வினியோக திட்டத்தின் கீழ், மாதந்தோறும், ஒருவருக்கு வழங்கப்படும், ஐந்து கிலோ உணவு பொருட்களை, ஏழு கிலோவாக உயர்த்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், 80 கோடி மக்கள் பயன் பெறுவர்.
மாநில அரசுகள், பொது வினியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்க, தேவையான உணவுப் பொருட்களை மத்திய அரசிடமிருநது முன் கூட்டியே பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜவுளி மற்றும் நகைகள் ஏற்றுமதிக்கான வரிச்சலுகையை நீட்டிக்க, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கிராம வங்கிகளுக்கு மறு முதலீடாக, 1,340 கோடி ரூபாய் வழங்கவும், ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X