'கொரோனா' பாதிப்பு 23 ஆக உயர்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை, :தமிழகத்தில், 'கொரோனா வைரஸ்' பாதித்தவர்கள் எண்ணிக்கை, 23 ஆக உயர்ந்துள்ளது; ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, இதுவரை, 2.9 லட்சம் பேர் வந்துள்ளனர். அவர்களில், 15 ஆயிரத்து, 492 பேர், அரசு ஏற்படுத்தியுள்ள கண்காணிப்பு மையம் மற்றும் அவர்களின்
வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா வைரசுக்கு நேற்று முன்தினம் வரை, 18 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மதுரை, அரசு மருத்துவமனையில் இருந்த,
மதுரையை சேர்ந்த, 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு
உயிரிழந்தார். இதன் வாயிலாக, முதல் கொரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
இதற்கிடையே, இந்தோனேஷியாவை சேர்ந்த, நான்கு பேர், தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக, சென்னையை சேர்ந்த நபர் ஆகியோருக்கு
கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,
23 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை, 890 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; அதில், 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார்; 110 பேரின் பரிசோதனை
முடிவுகள், இன்று வெளிவர வாய்ப்புள்ளது.

தேவை மனநல ஆலோசனை!
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்,
நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர், தொடர் பணிச்சுமை காரணமாக, மன ரீதியாக பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, கொரோனா அச்சம் அதிகளவு ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவருக்கும் மன நல ஆலோசனை அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை
எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X