சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசு மருத்துவமனைக்கு பூட்டு

Added : மார் 26, 2020
Share
Advertisement
 கொரோனா வைரஸ் பாதிப்பால்  அரசு மருத்துவமனைக்கு பூட்டு

கமுதி:கொரோனா வைரஸ் பாதிப்பால், கமுதி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஏப்.14 வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் நாடெங்கும் மக்கள் பீதியில் உள்ள நிலையில், அவசர சிகிச்சை, கர்ப்பிணிகள், தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு கமுதி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.ஆனால் கொரோனா தொற்று நோயால், கமுதி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு பின் பக்க வழியாக அவசர சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். கமுதி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முக கவசம் வழங்கப்படவில்லை. இதனால் நோயாளிகள், நர்சுகள், பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.இதேபோல் கமுதியில் முக கவசம் முழு தட்டுப்பாட்டில் உள்ளது. ஆகவே கமுதி அரசு மருத்துவமனை மற்றும் மெடிக்கல்களில் முக கவசம் தாராளமாக கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X