சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடங்க மறுத்த இளைஞர்களுக்கு அபராதம் விதித்த போலீசார்

Added : மார் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பஸ், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், இதை மீறும் வகையில் டூவீலர், கார்களில் சென்று அடங்க மறுத்த வாகன ஓட்டிகளை மடக்கிய போலீசார் அபராதம் விதித்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் நேற்று வாகன ஓட்டிகள் அதிகளவில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தனர். போலீசார் களத்தில் இறங்கி வாகனங்களை சோதனை செய்தனர்.மருத்துவமனை சென்ற நோயாளிகள், உணவுப் பொருட்கள் எடுத்துச்சென்ற வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். மற்ற வாகனங்களை மடக்கி அபராதம் விதித்தனர். இதனால் பகல் 3:00 மணிக்கு பின் வாகனங்கள் ஓட்டுவது குறைந்தது.டீக்கடை, பேக்கரிகள் திறக்கப்பட்டிருந்ததால், மக்கள் தெருக்களில் அதிகமாக நடமாடத் தொடங்கினர். பேக்கரிகள், டீக்கடைகளையும் மாலை 6:00 மணிக்கு பின் மூட உத்தரவிட்டனர்.
*ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒரு சில பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டமாக நின்றதை வட்டார மருத்து அலுவலர் சுகந்தி தலைமையில் மருத்துவ பணியாளர்களும், செயல் அலுவலர் மெய்மொழியன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்களும் ஆலோசனை வழங்கி குறிப்பிட்ட இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்குமாறு கூறினர்.இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் டூவீலர்களில் சுற்றி வந்த இளைஞர்களை திருவாடானை டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீசார் எச்சரித்து அபதாரம் விதித்தனர்
.*திருவாடானை, தொண்டியில் சில இளைஞர்கள் டூவீலர்களில்சென்றனர். வீணாக சாலைகளில் டூவீலர்களில் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரித்தனர். கருமொழி, முப்பையூர், சின்னக்கீரமங்கலம் செக்போஸ்ட்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X