கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைப்பு ஐகோர்ட் நிர்வாக குழு உத்தரவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை :சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க, உயர் நீதிமன்ற நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற நிர்வாக குழு எடுத்த முடிவுகள் குறித்து, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், சி.குமரப்பன் வெளியிட்ட சுற்றறிக்கை:கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், 21 நாட்களுக்கு, ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதனால், நீதித்துறை ஊழியர்கள் உட்பட, பொதுமக்களின் நடமாட்டம் கட்டுக்குள் வந்துள்ளது. இதை கருத்தில் வைத்து, உயர் நீதிமன்றம் உட்பட, அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, நிறுத்தி வைக்கப்படுகின்றன.
எனவே, மறு உத்தரவு வரும் வரை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வளாகத்திற்குள், யாருக்கும் அனுமதியில்லை. அதிக முக்கியத்துவம் வாய்ந்த, அவசர வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் எனில், சம்பந்தப்பட்ட நீதிபதி அனுமதி பெற்று, தாக்கல் செய்ய வேண்டும். அந்த வழக்கு விசாரணை நடைபெறும் இடம், நேரடி விசாரணையா அல்லது வீடியோ கான்பரன்ஸ் வாயிலான விசாரணையா என, பின்னர் தெரிவிக்கப்படும். நிர்வாகம் அல்லது நீதிமன்ற அலுவல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்களை, 'இ -- மெயில்' வாயிலாக தொடர்பு கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதே போல, கீழமை நீதிமன்றங்களிலும் உள்ளே செல்ல அனுமதியில்லை. மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அனுமதியோடு, மிக அவசர வழக்காக இருந்தால் மட்டுமே, கீழமை நீதிமன்றங்கள், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளலாம்.உயர் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அனைவரும், தகவல் தெரிவிக்கவும், உயர் அதிகாரிகள் உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், தங்களது அலைபேசி எண்களை, செயலில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X