சீனாவை மிஞ்சியது ஸ்பெயின்

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சீனாவை மிஞ்சியது ஸ்பெயின்

மேட்ரிட், :'கொரோனா' வைரஸ் பாதிப்பில் இருந்து, நம் அண்டை நாடான சீனா மீண்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதிக பலி உள்ள நாடுகளில் சீனாவை, அது முந்திஉள்ளது.
கொரோனா வைரஸ், 187 நாடுகளில் பரவி, கொத்துக் கொத்தாக உயிர் பலி வாங்கி வருகிறது. வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நாடுகளும் கடும் பீதியில் உள்ளன. உலகம் முழுதும், வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, நான்கு லட்சத்து, 39 ஆயிரத்து, 941ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை, 19 ஆயிரத்து,744ஆக உயர்ந்துள்ளது.
உலகெங்கும், ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 942 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.கடந்த மாதத்தில் முதல் தொற்று ஏற்பட்ட, ஐரோப்பிய நாடான இத்தாலி, அதிக பலி உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, இதுவரை, 6,820 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம், 69 ஆயிரத்து, 176 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், 8,326 பேர் குணமடைந்துள்ளனர்.மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், பலி எண்ணிக்கை, 3,434ஆக உயர்ந்துள்ளது. அதிக பலி நாடுகள் பட்டியலில், சீனாவை முந்தி, இரண்டாவது இடத்தில் அது உள்ளது. அங்கு, 47 ஆயிரத்து, 610 பேருக்கு தொற்று உள்ளது.இதுவரை, ஐந்து நாடுகளில், 1,000த்துக்கும் மேற்பட்ட உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரானைத் தொடர்ந்து, பிரான்சும் இணைந்துள்ளது. அங்கு, 1,100 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஐரோப்பிய கண்டம்தான் மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. மொத்தம், இரண்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 340 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு, 12 ஆயிரத்து, 719 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த இடத்தில் ஆசியா உள்ளது. இங்கு, 99 ஆயிரத்து, 805 பேருக்கு தொற்று உள்ளது; 3,593 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் தொற்று அதிகம் உள்ள, ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், பாதிக்கப்பட்டுள்ள, 8.3 கோடி பேருக்கு, 77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மீட்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில், 140 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மீட்பு திட்டத்துக்கு, செனட் சபையில், இரண்டு முக்கிய கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

சார்லசுக்கு தொற்று
பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு, 71, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதையடுத்து, சுயமாக தனிமையில் இருந்து வருகிறார். அதே நேரத்தில், அவருடைய மனைவி கமிலாவுக்கு, வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.'இளவரசர் சார்லசுக்கு, கொரோனா வைரசின் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டது. மற்றபடி, அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தன் பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



சீனர்கள் ஆர்வம்

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா, தற்போது மீண்டு வருகிறது. இதற்கிடையே, இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், சீன அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக, 5,000த்துக்கும் மேற்பட்ட சீனர்கள் தாங்களாக முன்வந்து பதிவு செய்துள்ளனர்.



உலகெங்கும் உள்ள நிலை

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-மார்-202019:50:08 IST Report Abuse
Rajagopal இந்தியக் குடிமக்கள் ஒத்துழைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஸ்பெயின், இத்தாலியை விட அதிக அளவில் மரணங்கள் சம்பவிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X