பொது செய்தி

தமிழ்நாடு

அலட்சியம்!ராமநாதபுரம் நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள்.....முகக்சவம், கையுறை இன்றி தூய்மை பணியாளர்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement
அலட்சியம்!ராமநாதபுரம் நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள்.....முகக்சவம், கையுறை இன்றி தூய்மை பணியாளர்கள்

ராமநாதபுரம்:கொரோனா பரவி வரும் நிலையில், ராமநாதபுரம் நகராட்சிப்பகுதியில் பணிபுரியும் துாய்மை, சுகாதார பணியாளர்களுக்கு முகக்கவசம்,கையுறைகள் வழங்காத நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தொழிலாளர்கள் நோய் பீதியில் தவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவினால் பேரழிவு ஏற்படும் என்ற நோக்கில் இரவு, பகல் பாராது சுகாதாரத்துறை அதிகாரிகள் பணி செய்கின்றனர். ராமநாதபுரம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் முகக்கவசம், கையுறைகள் வழங்கப்படவில்லை.துாய்மை பணியாளர்கள் நோய் பரவும் அச்சத்தில் பணியாற்றுகின்றனர். மேலும் குப்பை தரம் பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மற்ற நகராட்சிகளில் குப்பை அகற்றவும், அதற்கு தேவையான பாதுகாப்பு முககவசம், கையுறைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி துாய்மை தொழிலாளர் சங்க தலைவர் பாலு கூறியதாவது:துாய்மை பணியாளர்களுக்கு நகராட்சியால் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல் நடத்துகின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டால் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.துாய்மை பணியாளர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இது குறித்து கலெக்டர், நகராட்சிகளின் தென் மண்டல இயக்குநர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம், முதல்வருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.

நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டாலின் கூறுகையில், இன்று முதல் அனைத்து பணியாளர்களுக்கும் கையுறை, முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வரை வழங்கப்படாதது முடிந்து போனது. இன்று நடப்பதை பேசுங்கள், என அலட்சியமாக பதில் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X