பொது செய்தி

தமிழ்நாடு

இலவசமாக முகக்கவசம் தைத்து வினியோகம் செய்யும் டெய்லர்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 இலவசமாக முகக்கவசம் தைத்து வினியோகம் செய்யும் டெய்லர்

ரெகுநாதபுரம்:கொரோனா வைரஸ் கிருமிகள் பரவாமல் தடுக்க டெய்லர் ஒருவர் இலவசமாக முகக்கவசம் தைத்து மக்களுக்கு வழங்குகிறார்.
ரெகுநாதபுரம் அருகே தினைக்குளத்தில் டெய்லரிங் ஷாப் வைத்திருப்பவர் பாலா 45. மார்ச் 18 முதல் 2,500 துணியால் ஆன முகக்கவசம் (மாஸ்க்) தைத்து அனைவருக்கும் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டெய்லர் பாலா கூறியதாவது:கொரோனா குறித்த விழிப்புணர்வாக, எனது டெய்லரிங் கடையில் மனைவி சுந்தரியின் உதவியுடன் 80 மீ., துணியை வாங்கி உரிய முறையில் இரவு, பகலாக முகக்கவசம் தைத்து இலவசமாக வழங்கி வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, கிராம மக்கள், பயணிகள் அனைவருக்கும் தருகிறேன். இதனை அணிந்து கொண்டு செல்ல வலியுறுத்துகிறேன். மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கை கடைப்பிடித்து மாஸ்க்குடன் வீட்டில் இருக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X