பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
பி.டி.ஓ,க்கள் சாவித்திரி, மங்களேஸ்வரி தலைமை வகித்தனர். தாசில்தார் முருகேசன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆர். ஐ., வி.ஏ.ஓ.க்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.பி.டி.ஓ.,க்கள் பேசுகையில், கிராமங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்டிப்பாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
பொது மக்களுக்கு கை கழுவும் முறையை தெரியப்படுத்த வேண்டும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் குறித்து தகவல்களை சுகாதாரத்துறை அலுவலர்களிடமும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களுடைய வீடுகளில் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X