பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கமுதி:கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் கமுதி அருகே கூட்டுறவு சங்க தலைவர் உட்பட 11 பேர் பொறுப்பேற்றனர்.
கமுதி அருகே காத்தனேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் ஏப். 2018 ல் அறிவிக்கப்பட்டு, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்திடம் முருகன் என்பவரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சப்பாணி, போஸ் இருவரும் முறையீடு செய்தனர்.தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முறையாக தேர்தல் நடத்த கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு 109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யபட்டுள்ள நிலையில் 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு 2020 மார்ச் 19 ல் தேர்தல் நடத்தப்பட்டது.மார்ச் 20 ல் ஓட்டு எண்ணிக்கை, தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராமலிங்கம் தலைமையிலும், கமுதி கூட்டுறவு சார்பதிவாளர் கிருஷ்ணராவ் முன்னிலையிலும் நடந்தது. இதில் தலைவராக வினோதினி, துணைத்தலைவராக சீதா உட்பட 11 பேர் கொண்ட இயக்குநர்கள் தேர்வு செய்யபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X